செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகர சுவாமி கோவில் ஆடிப்பூர வளைகாப்பு!

ஆன்மிகம் ஆலயங்கள் விழாக்கள் விசேஷங்கள்
dharmasam-varthini

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அருள் பாலிக்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூரம் வளைகாப்பு உத்ஸவம் நேற்று நடைப்பெற்றது

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் புகழ் பெற்று விளங்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

dharmasam-varthini-1

இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு வளைகாப்பு உத்ஸவம் நடந்தது. கொரோனா காலத்தில் கோயிலுக்குள் நடந்த இந்த வைபவத்தில் அர்ச்சர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா வெகுவிமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடிப்பூர வளைகாப்பு உத்ஸவ பூஜைகளை கோயில் பரம்பரை அர்ச்சகர் கணேச பட்டர் நடத்தி வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.