எல்லோரும் செய்யலாம் இந்த சில்டா சாட்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
childa-chat

சில்டா சாட்

தேவையானவை:
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துருவிய பனீர் – அரை டீஸ்பூன்
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை சட்னி செய்ய:
கொத்தமல்லித்தழை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கொத்தமல்லித்தழை சட்னி செய்யக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, ஒரு கரண்டி மாவெடுத்து ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். அதன் மேல் கொத்தமல்லித்தழை சட்னியைத் தடவி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, ஆம்சூர் பவுடர், ஓமப்பொடி, துருவிய பனீர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.