போலி நன்கொடைகள்: ஆச்சார்யாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar - 2026

ஒரு கவிஞன் தனது திறமையை காட்டி பரிசுகள் பல பெற்று வர அரசவையை நாடிச் சென்றான். அவையில் வீற்றிருந்த அரசனையும் மற்றவர்களையும் நல்ல பாடல்களை பாடி அவன் திருப்தியுற செய்தான். கச்சேரி முடிந்ததும் அரசன் கவிஞனை வெகுவாக பாராட்டினார்.

பிறகு பொக்கிஷத்தாரரைக் கூப்பிட்டு 50,000 ரூபாயை கொடு என்று அரசன் கட்டளையிட்டான். இவ்வளவு பெரிய தொகையை கேட்டதும் கவிஞன் திகைத்துப் போய் விட்டான். சந்தோஷமும் திருப்தியும் கவிஞனின் முகத்தில் பொங்க அவன் பொக்கிஷத்தாரரை அணுகினான் .ஆனால் அவர் கவிஞருக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. கவிஞரும் தயவுசெய்து எனக்கு பணத்தை கொடுங்கள் என நினைவு படுத்தினான். பொக்கிஷம் ஏன் தரவேண்டும் என்று கேட்டான். இது அரசரின் ஆணை என்று பதிலளித்தான் கவிஞன். இதைக் கேட்ட பொக்கிஷதாரர் சிரித்துக்கொண்டே நான் பணத்தை கொடுக்க மறுக்கிறேன் என்று அரசனிடம் போய் கூறுங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னான்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

கவிஞன் அரசனிடம் திரும்பி வந்து நீங்கள் எனக்கு அளிப்பதாகச் சொன்ன பணத்தை பொக்கிஷதாரர் கொடுக்க மறுக்கிறார் என்று முறையிட்டான். அரசன் அப்படியா சரி அவன் எதற்காக உங்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டான் இதை கேட்டதும் அந்தக் கவிஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது. தாங்கள் தானே எனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு கூறினீரகள். என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அரசன் ஆமாம் நான் கூறியது உண்மையே இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன் அதற்கு பதில் சொல்லுங்கள். நான் பரிசளிப்பதாக தெரிவித்த போது உங்களுக்கு எப்படி இருந்தது? என்று கேட்டான். மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றான் கவிஞன். பிறகு அரசன் அவ்வளவுதான் நீங்கள் உங்கள் பாடல்களால் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தீர்கள் பதிலுக்கு நான் நன்கொடை அறிவித்து உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தேன். இத்துடன் கணக்கு தீர்ந்தது என் ஞாயம் சரிதானே நீங்கள் பணத்தை வேறு ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என்று தெளிவுபடுத்தினார். விசித்திரமான விளக்கத்தைக் கேட்ட கவிஞன் மூர்ச்சை அடைந்தான்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

புத்திசாலியான ஒருவரை சந்தோஷப்படுத்த முயற்சிக்க வேண்டும் அப்படி செய்தால் அது இறைவழிபாடு ஆகிவிடும். விலைமதிப்பற்ற ஒரு உபதேசம் இது. ஒருவருக்கு நன்கொடை டைய அறிவித்தால் அதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் மகிழ்ச்சி அடைகிறான். பரிசுப்பொருள் உண்மையாக அவனுக்கு கிடைத்து விட்டாலோ அந்த சந்தோஷம் பன்மடங்கு அதிகமாகிறது. அரசனைப் போல் வெறும் வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டால் நிச்சயம் போதாது மேலும் அது ஏமாற்றியதை போன்றது.

துரதிர்ஷடவசமாக பிரபலமான பணக்காரர்கள் சிலர் சமுதாயத்தில் தங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பொதுக்கூட்டங்களில் நன்கொடைகளை அறிவித்து விடுவார்கள். ஆனால் அந்த பணத்திற்கான காசோலையை மட்டும் அனுப்ப மாட்டார்கள். வெறும் வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் உண்மையாகவே ஒருவன் தானம் செய்யவேண்டும்.

தானம் என்ற பெயரில் யோகியதை அற்றது என்று தான் கருதும் பொருட்களை பிறருக்கு தரக்கூடாது. ஒரு சிறுவனுக்கு வாழைப்பழம் கிடைத்தது. அதிகமாக பழுத்திருந்ததைப் பார்த்து தனக்கு அது உகந்ததல்ல என நினைத்து அதனை தன் தந்தைக்கு கொடுத்தான். தந்தை தனது மனைவிக்குக் கொடுத்தார். அவள் அதை வாங்கி வேலைக்காரிக்கு கொடுத்தாள். வேலைக்காரி பசுமாட்டிற்கு கொடுத்தாள் பால்காரன் அவளிடம் அவ்வளவு பழுத்த பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல என்று சொல்லி வாங்க மறுத்து விட்டான். கடைசியாக வீட்டு எஜமானர் தன் மனைவியை கூப்பிட்டு புரோகிதரை கூப்பிட்டு கொடுத்து விடலாம் என்றார். இப்படிப்பட்ட தானம் பாராட்டத்தக்கதல்ல. மேலும் இது குறிப்பிடத்தக்க எந்த புண்ணியத்தையும் கொடுக்காது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.01 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img