பூர்ண சரணாகதி
ஒருமுறை தன் தோள்களில் கனமான பெரிய பையை வைத்துக்கொண்டு பக்தர் ஒருவர் ஆச்சாரியாருக்கு நமஸ்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அவரை குனியவும் விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது பையை கழற்றி கீழே வைத்துவிட்டு வசதியாக நமஸ்காரம் செய்து கொள்ளவும் அவர் தயாராக இல்லை அவருடைய இந்த திண்டாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆச்சாரியாள் புன்னகை செய்து ஏன் நீ உன் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நமஸ்காரம் செய்யக்கூடாது. பாரத்தை இழுத்துப்போட்டுக்கொண்டால் பூரண சரணாகதி எப்படி சாத்தியமாகும் என்று கூறினார்.
வாழ்க்கையின் மிக உயர்ந்த தத்துவத்தை எளிதாக தமக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் ஆச்சாரியாள் கூறியது பக்தரை மெய்சிலிர்க்க வைத்தது