விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கணாஷ்டகம் தமிழ் பொருளுடன்..!

Published:

vinayakar
vinayakar

ஏக தந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சன ஸன்னிபம்|
லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்.||(1)

ஒரே தந்தத்தை உடையவரே! பெருத்த சரீரத்தைக் கொண்டவரே! உருக்கிய பொன்னைப் போன்ற நிறமுடையவரே! தொப்பைக் கணபதியே! விசாலமான பார்வையை உடையவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை நமஸ்கரிக்கின்றேன்(1)

மௌஞ்ஜீக் கிருஷ்ணா ஜினதரம் நாகயக்ஞோபவீதினம் |
பாலேந்து விலஸன் மௌலிம் வந்தே அஹம் கணநாயகம் ||–(2)

முஞ்சாப்புல், கிருஷ்ணார்ஜினம் இவற்றை அணிந்தவரே! நாகத்தைப் பூணூலாகத் தரித்திருப்பவரே! தலையிலே பாலச்சந்திரனைச் சூடிக்கொண்டிருப்பவரே! பூத கணங்களின் தலைவரான கணேச மூர்த்தியை வணங்குகின்றேன்…(2)

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ரூபி: பரிபாலிதம் |
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநயகம் ||–(3)

சக்தியின் மனதை மகிழ்விபவரே! சப்த மாதாக்களாலும் ரட்சிக்கப்பட்டவரே! பக்தர்களிடம் அன்பு கொண்டவரே! மதம் கொண்டவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை வணங்குகின்றேன்.–(3)

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலாவிபூஷிதம் |
சித்ர ரூபதாம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்||..(4)

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

பலவித ரத்தினங்களாலும், பலவித மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவரே! பல வித ருபத்தைத் தரிப்பவரே! தேவ பூத கணங்களின் தலைவருமான மகா கணபதியை வணங்குகின்றேன்..(4)

கஜவக்த்ரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம் |
பாஸாங்குஸதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம். –(5)

யானை முகத்தைக் கொண்டவரே! தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! செவிகளாகின்ற விசிறிகளால் அலங்கரிக்கப் பட்டவரே! பாசம், அங்குசம் இவற்றைத் தரித்திருப்பவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை வணங்குகின்றேன்.—(5)

மூஷிகோத்தம மாருஹ்ய தேவாஸுர மஹாஹவே |
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்…(6)

தேவ-அசுரப் போரில் மூஞ்சூரின் மேல் ஏறிப் போர்புரிந்து ஜெயம் பெற்றவரே! சிறந்த பராக்கிரமத்தை உடையவரே! பூத கணங்களின் தலைவரான ஸ்ரீ மகாகணபதியை வணங்குகின்றேன்.–(6)

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரைஸ்ஸதா |
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே அஹம் கணநாயகம்.—(7)

யட்சர், கின்னரர், கந்தர்வர், சித்தர், வித்யாதரர்களால் சதா பூஜிக்கப்படுபவரே! பெரிய புண்ணியரே! பூதகணங்களின் தலைவரான மகா கணபதியை வணங்குகின்றேன்.–(7)

ஸர்வ விக்ன கரம் தேவம் ஸர்வ விக்னவிவர்ஜிதம் |
ஸர்வ ஸித்தி ப்ரதா தாரம் வந்தே அஹம் கணநாயகம்.–(8)

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

விக்னேஸ்வரரைத் தூஷிப்பவர்க
ளுக்குத் தடையைச் செய்கின்றவரே! தேவ தேவரே! பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நிவர்த்திப்பவரே! எல்லாப் பாக்கியங்களையும் தருபவரே! பூத கணங்களின் தலைவரான ஸ்ரீ மகா கணபதியை வணங்குகின்றேன்.

கணாஷ்டக மிதம் புண்யம் பக்தி தோ ய: படேந் நர: |
விமுக்தச் ஸர்வபாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி ||..(9)

இந்தக் கணாஷ்டகம் மகா புண்ணியமானது. பக்தியோடு இதனால் கணேசரைத் தியானிப்பவருக்கு எல்லாக் காரியங்களும் வெற்றியாகும். எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபட்டு முடிவில் கைலாச லோகத்தையும் அடைவர் என்பதில் சந்தேகம் இல்லை..(9)

Related articles

Recent articles

spot_img