spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஸ்ரீதசமயி பாலா ஸ்தோத்ரம் தமிழ் அர்த்ததத்துடன்..!

ஸ்ரீதசமயி பாலா ஸ்தோத்ரம் தமிழ் அர்த்ததத்துடன்..!

- Advertisement -
balambikai
balambikai

ஸ்ரீதசமயி பாலா ஸ்தோத்ரம்

ஸ்ரீகாளி பகளாமுகி ச லலிதா தூம்ராவதி பைரவி
மாதங்கி புவனேஸ்வரி ச கமலா ஸ்ரீவஜ்ர வைரோசனி
தாராபூர்வமஹாபதேன கதிதா வித்யா ஸ்வயம் ஸம்பூனா
லீலாரூபமயி ச தேசதசாதா பாலா து மாம் பாது சா (1)

பொருள்: ஆதிகாலம் தொட்டு தாம் விரும்பிய வடிவத்தை எடுக்கும் சம்புவை போல, காளி, பகளாமுகி, லலிதா, தூமாவதி, பைரவி, மாதங்கி, புவனேஸ்வரி, கமலா, சின்னமஸ்தா, தாரா என பல்வேறு வடிவங்களை தாங்கிய பாலா என்னை என்றும் காக்க வேண்டும்!!

சியாமாம் சியாமகனவ பாஸருசிராம் நீலாலங்கலங்க்ருதம்
பிம்போஷ்டிம் பலிசத்ரு வந்தித பதாம் பாலார்க்க கோடி பிரதாம்
த்ராஸ த்ராண க்ருபா மூட ததிம் பக்தாய தனோத்யதாம்
வந்தே சங்கட நாஸினீம் பகவதீம் பாலாம் ஸ்வயம் காளிகாம் (2)

பொருள்: கருமேகங்கள் போல பொலிந்த திருமேனியை உடையவளும், முன் நெற்றி வரை பிரளும் அழகிய நீல நிற கூந்தலை உடையவளும், கோவைப் பழம் போன்ற அழகிய சிவந்த அதரங்களை கொண்டவளும்,

மஹாபலியின் சத்ருவான இந்திரனால் வணங்கப்படும் திருவடிகளை உடையவளும், கோடி உதயசூரியன் போல பிரகாசமான வடிவை உடையவளும், பாவிகளின் முண்டத்தினை மாலையாக அணிந்தவளும்,

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான காளி வடிவத்தினை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

பிரம்மாஸ்த்ராம் சுமுகீம் பகார விபவாம் பலாம் பலகீனீபாம்
ஹஸ்த ந்யஸ்த சமஸ்த வைரிர சமானமன்யே ததானாம் கதாம்
பீதாம்பூஷண கந்தமல்ய ருசிராம் பீதாம்பராங்கம் வராம்
வந்தே சங்கட நாஸினீம் பகவதீம் பாலாம் ச பகளாமுகீம் (3)

பொருள்: பிரம்மாஸ்திர சக்தியாக விளங்குபவளும், “ப”காரத்தில் பிரீதி உடையவளும், அழகான கோலத்தில் விளங்கும் அழகு நங்கை வடிவானவளும், சத்ருக்களின் நாவை கட்டுக்குள் வைப்பவளும்,

கதாயுதத்தை கரத்தினில் ஏந்தியவளும், பொன் ஆபரணங்களையும், சந்தன குழம்பை பூசியவளும், மஞ்சள் பட்டு வஸ்திரம் அணிந்து அதிரூப சுந்தரி வடிவானவளும்,

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான பகளாமுகி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

பாலார்க்க ஸ்ருதிபாஸ்கராம் த்ரிநயனாம் மந்தஸ்மிதாம் சண்முகீம்
வாமே பாஸ தனுர்தராம் சுவிபவாம் பாணம் ததா தக்ஷிணே
பாரா வரவிஹாரிணீம் பரமயீம் பத்மாஸனே சம்ஸ்திதாம்
வந்தே சங்கட நாஸினீம் பகவதீம் பாலாம் ஸ்வயம் ஷோடஸீம் (4)

பொருள்: பால சூரியனைப் போல பிரகாசிப்பவளும், மூன்று கண்களை உடையவளும், மென் புன்னகையுடன் சுந்தரமாக விளங்குபவளும்,

கோதண்டத்தையும், பாசத்தையும் இடக்கரங்களில் ஏந்தியவளும், பாணத்தையும், அங்குசத்தையும் வலக்கரங்களில் ஏந்தியவளும், பத்மாசனத்தில் திவ்ய சம்பத்துக்களுடன் வீற்றிருப்பவளும்,

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான ஷோடஸி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

தீர்க்காம் தீர்க்ககுசாமுதக்ரதஸனாம் துஷ்டசித்தாம் தேவதாம்
க்ராவ்யாதாம் ‌குடிலேக்ஷணாம் ச குடிலாம் காகத்வஜாம் க்ஷுத்க்ருஷாம்
தேவீம் சூர்ப்பகராம் மலீனவசனாம் தாம் பிப்பலாதார்ச்சிதாம்
பாலாம் சங்கடநாஸினீம் பகவதீம் த்யாயாயாமி தூமாவதீம் (5)

பொருள்: உயரமாக இருப்பவளும், கனமான ஸ்தனபாரத்தை உடையவளும், நீண்ட கோரைப் பற்களை உடையவளும், துஷ்டர்களை சிக்ஷிப்பவளும், மாமிசத்தை உண்பவளும், குரூரமான, குழிந்த கண்களை உடையவளும்,

காகத்தினை கொடியாக உடையவளும், பசியால் களைத்து, இளைத்த சரீரத்தை உடையவளும், முறத்தை கைகளில் ஏந்தியவளும், அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பவளும்,

பிப்லாதரால் துதிக்கப்பட்டவளும், பக்தர்களின் துயரை துடைப்பவளுமான தூமாவதி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

உத்யத்கோடி திவாகர பிரதிபதாம் பாலார்க்க பாகர்படாம்
மாலா புஸ்தக பாஸமங்குசதராம் தைத்யேந்த்ர முண்டஸ்ரஜாம்
பீனோதுங்க பயோதரம் திரிநயனாம் பிரம்மாதிபி சம்ஸ்துதாம்
பாலாம் சங்கடநாஸினீம் பகவதீம் ஸ்ரீபைரவீம் தீமஹி (6)

பொருள்: கோடி உதயசூரியனைப் போன்ற நிறமும், பிரகாசமும் கொண்டவளும், சிகப்பு கலந்த நீல நிற வஸ்திரத்தை அணிந்தவளும், அக்ஷரமாலை, புத்தகம், பாசம், அங்குசம் ஆகியவற்றை கரங்களில் தரித்திரிப்பவளும்,

அசுரேந்திரர்களின் முண்டங்களை மாலையாக அணிந்தவளும், மூன்று கண்களும், கனமான ஸ்தனபாரத்தை உடையவளும், பிரம்மாதி தேவர்களால் பூஜிக்கப்படுபவளும்,

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான பைரவி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

வீணா வதன தத்பராம் த்ரிநயனாம் மந்தஸ்மிதாம் சண்முகீம்
வாமே பாஸ தனுர்தராம் து நிகரே பாணம் ததா தக்ஷிணே
பாராவார விஹாரிணீம் பரமயீம் பிரம்மாஸனே சம்ஸ்திதாம்
வந்தே சங்கட நாஸினீம் பகவதீம் மாதங்கினீம் பாலிகாம் (7)

பொருள்: வீணை மீட்டுவதில் பிரியமானவளும், மூன்று கண்களை உடையவளும், மென் புன்னகை பூத்த முகத்தினளும், பாசம், கோதண்டம் ஆகியவற்றை இடக்கரங்களில் ஏந்தியவளும்,

பாணமும், அங்குசமும் வலக்கரங்களில் ஏந்தியவளும், தெய்வீக அழகு பொருந்தியவளும், பிரம்மாசனத்தில் வீற்றிருப்பவளும்,

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான மாதங்கி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

உத்யத் சூர்யநிபாம்‌ ச இந்து முகுடமிந்தீவரே சம்ஸ்திதாம்
ஹஸ்தே சாருவராபயம் ச ததீம் பாசம் ததாசாங்குசாம்
சித்ராலங்க்ருத மஸ்தகாம் த்ரிநயனாம் பிரம்மாதிபி: சேவிதாம்
வந்தே சங்கட நாஸினீம் ச புவனேசீமாதி பாலாம் பஜே (8)

பொருள்: உதயசூரியனைப் போல பிரகாசிப்பவளும், பிறைநிலவை சிரசில் சூடியவளும், செந்தாமரையில் வீற்றிருப்பவளும், பாசம், அங்குசம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தியவளும், வர, அபய முத்திரைகளை காட்டுபவளும்,

அழகிய அலங்காரமான முன் நெற்றியை கொண்டவளும், மூன்று கண்களை உடையவளும், பிரம்மாதி தேவர்களால் பூஜிக்கப்படுபவளும்,

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான புவனேஸ்வரி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை போற்றி பாடுகிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe