
சங்கரர்
தவ ஹிதமேகம் வசனம் வக்ஷ்யே, ச்ருணு
“உனது நன்மைக்காக ஒரு வசனம் சொல்கிறேன் கேள்” என்கிறார்.
அவரது உபதேசம் எப்போது பயன்படும்?
ஸுககாமோ யதி ஸததம்
“எப்போதும் சுகத்தையே நீ விரும்பினால் இந்த உபதேசம் உனக்குப் பயன்படும்.”
உபதேசம் என்ன?
ஸ்வப்னே த்ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி
“கனவில் பார்ப்பதெல்லாம் பொய் என்று உனக்குத் தெரியும். அதேபோல் விழிப்பு நிலையும் பொய் என்று தெரிய வேண்டும்” என்பது அவரது உபதேசம்
இவ்வாறு பகவத்பாதாள் நமக்கு வேதாந்த தத்துவத்தையும் சேர்த்துத் தம்முடைய ஸ்தோத்திரங்களை அருளினார்.
ஆகையால், நாம் வெறும் சுலோகங்களை மட்டும் மனப்பாடம் செய்து பகவானுடைய சன்னிதியில் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றில் பகவத்பாதாள் கூறியுள்ள தத்துவத்தையும் அனுஸந்தானம் செய்து வந்தால் நமக்கு மிகவும் விசேஷமான பலன் உண்டாகும்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்