December 8, 2024, 9:01 PM
27.5 C
Chennai

கந்த சஷ்டி: நித்திய பாராயண பத்து!

murugar
murugar

திருப்போரூர் நித்திய பாராயணப்பத்து

நாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்
பேயேன் இழைத்த பெரும்பிழையை … நீயே
பொறுத்தாள்வ துன் கடனாம் போரூரா! என்னை
ஒறுத்தா லெனக்கார் உறவு. (1)

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
நல்லறுத்து ஞானியல்லேன் நாயினேன் … சொல்லறத்தின்
ஒன்றேனும் இல்லேன் உயர்ந்ததிருப் போரூரா!
என்றேநான் ஈடேறு வேன். (2)

ஐம்பொறியாற் போகம் அயின்றாலும் நாயேனுன்
செம்பதுமத் தாளிணையே சிந்திக்க … உம்பருக்குங்
காணஅரி தாம் இன்பங் காணத்தென் போரூரா!
பூண அருளே புரி. (3)

ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே! … நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறுநீ பேசு. (4)

பேய்போம் துயரம்போம் பித்தம்போம் போகாத
நோய்போம் மிடிபோம் நுவலுங்கால் … தாய்போல
நன்னிதியைப் போல நயந்ததிருப் போரூரன்
சன்னிதியைக் கண்டளவே தான். (5)

திருவடிக்கே தோன்றுஞ் சிறியேன் துயரம்
ஒருவருக்குந் தோன்றா தென்னுள்ளே … சருவிஎனை
எந்நாளும் வாட்டும் இடர்களையப் போரூரா
நன்னாளிந் நாளா நயந்து. (6)

ALSO READ:  திருப்பதிக்குச் செல்லும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை!

ஆசையும் அன்பும் அபிமான மும் உனது
பூசையிலே வைக்காது பொய்க்காளாய்ப் … பேசரிய
பெண்ணாசை யாதி பிடித்துழன்றேன் போரூரா!
எண்ணாது நின்னை யிருந்து. (7)

நோயுற் றடராமல் நொந்துமனம் வாடாமற்
பாயிற் கிடவாமற் பாவியேன் … காயத்தை
ஓர்நொடிக்குள் நீக்கியெனை யொண்போரூர் ஐயாநின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து. (8)

கன்றழைக்கும் முன்னே கருதிவரு மாப்போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர்தோன்றி … ஒன்றினுக்கும்
அஞ்சாதே வாவென் றழைப்பாய்தென் போரூரா!
எஞ்சாத பேரருளா லின்று. (9)

ஆறுமுகம் வாழி! ஆறிரண்டு தோள்வாழி!
தேறுபதம் வாழி! யிரு தேவிமார் … வீறுபுடை வாழி.
வேல் வாழி! மயில் வாழி! போரூரர் வாழி!
சகம் வாழி! மகிழ்ந்து. (10)

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...