மனதில் நினைத்தாலே போதும்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar
bharathi theerthar

शिवनामनि भावितेऽन्तरङ्गे महति ज्योतिषि मानिनीमयार्धे।
दुरितान्यपयान्ति दूरदूरे मुहुरायान्ति महान्ति मङ्गलानि।।

சிவநாமனி பவிதேந்தராங்கே மஹதி ஜ்யோதிஷி மானிநிமயார்தே.
துரிதான்யபயந்தி துரதுரே முஹுராயந்தி மஹாந்தி மங்கலானி..

இந்த ஸ்லோகத்தில், சிவநாமத்தை மனதில் நினைத்தால் மட்டுமே எல்லா பாபங்களும் நீங்கும், நன்மைகளெல்லாம் உண்டாகும் என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் கூறுகிறார்.

ஆசார்யாள் சங்கரர் இயற்றியிருக்கும் ஸ்தோத்ரங்களை, முக்கியமாக சிவானந்தலஹரி, சிவ புஜங்கம் மற்றும் சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரங்களை பக்தர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

சிவபெருமானை பூஜிக்க வேண்டிய தினங்களில், சிவராத்ரி ரொம்ப விசேஷமுள்ளது. அன்று இரவெல்லாம் விழித்திருந்து சிவபூஜை செய்பவனுக்கு முக்தி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.

சிவபூஜைக்கு வில்வ இலை முக்கியமானது. பக்தியுடன் பண்ணப்பட்ட சிவபூஜை பக்தர்களுக்கு எல்லா அபீஷ்டங்களையும் தரும்.

இந்த மாதிரி பரமசிவனின் மஹிமையைப் பற்றிக் கூறும் சிவபுராணத்தை எல்லோரும் படித்து சிவானுக்ரஹத்துக்கு பாத்திரர்களாகட்டும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.