April 27, 2025, 11:06 PM
30.2 C
Chennai

ஆதியின் பாதி போல் ஆனந்தக் கண்ணனுடன் ருக்மிணி!

kalayan venkatrama perumal
kalayan venkatrama perumal

அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணர்

நம்மில் அந்நேகம்பேர் சிவன் பார்வதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர்
வடிவம் பற்றியும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றியும் தெரிந்திருப்போம்.

ஆனால் அதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோஹனூரில்
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணர் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றி அதிகம்பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான
சம்மோஹன கிருஷ்ணரின் சிறப்புகள் என்ன? அவரை வழிபடுவதால் என்ன பலன்?

அ/மி கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலை பற்றிய சிறப்புகள் என்ன?

பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழைபொழியும் கண்களோடு அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோஹன கிருஷ்ணர் திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும்.

சகல சௌபாக்யங்களும் வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும் .அனைத்து சம்பத்துக்களும் சேரும்.

இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.

இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோஹன கிருஷ்ணர்திருக்கோலம் எங்குள்ளது?

நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்
மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில்
அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணன் அருள்பாலித்து வருகின்றார்.

perumal
perumal

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில்

மூலவர்:கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர்
உற்சவர்:சீனிவாசர்
அம்மன்/தாயார்:பத்மாவதி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:காவிரி ஆகமம்
பூஜை:வைகானஸம்
பழமை:500 வருடங்களுக்குள்
புராண பெயர்:மோகினியூர்
ஊர்:மோகனூர்
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு

தல சிறப்பு:காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு.

அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலத்தை தரிசிப்பது தனிச்சிறப்பு.

இத்தல இறைவன் கல்யாண
பிரசன்ன வெங்கட்ரமணர்
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது.

சன்னதியின் மேல் விதானத்தில் நவகிரக மரச் சிற்பங்கள். அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

ALSO READ:  கண் துடைப்பு நாடகம் இல்லாமல், உண்மையாக வசதி செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

தலபெருமை:

திருப்பதியில் ஓர் நாள்:

இத்தல சுவாமி கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் “திருப்பதியில் ஓர் நாள்’ என்னும் உற்சவம் நடக்கிறது.

அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது.

திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே, அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம்.

இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும்.

ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது.

தன்வந்திரி சன்னதி: சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது.

எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். இவர்களை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

தன்வந்திரிக்கு, மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு, சுக்குப்பொடி, நாட்டுச்சர்க்கரை, நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.

ஒவ்வொரு திருவோணத்தின் போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள்.

பூஜை முடிந்தபின்பு தேங்காயை வீட்டு பூஜையறையில் வைத்து பூஜிக்க ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

குரு, சிஷ்யை தரிசனம்: சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது. பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மாணவர்கள் ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து வணங்கி, சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது விசேஷம்.

கோவில் அமைப்பு:

samohana krishnar
samohana krishnar

கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா, ருக்மணி உள்ளனர்.

ஆண்டாள், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது.

தலவிருட்சம் வில்வம். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். ஒரு செயலை துவங்குவது விநாயகரிடம், முடிவது ஆஞ்சநேயரிடம் என்பார்கள். இவ்விருவரையும் வழிபட்டு துவங்கும் வேலை, சிறப்பாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது.

ALSO READ:  இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மாசிப் பெருந் திருவிழா தேரோட்டம்!

கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம். உற்சவ காலங்களில் சுவாமி அலங்காரம், கருட சேவை சாதிப்பது எல்லாமே இங்குதான்.

அடுத்து மகா மண்டபம், நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள். வலதுபுறம் ஆண்டாளின் சிறு சன்னதி, இடதுபுறம் பாமா ருக்மிணி சமேத நவநீத கிருஷ்ணனின் சிறு சன்னதி.

மகா மண்டபத்தின் இடதுபுற விளிம்பில், லட்சுமி நரசிம்மர் மற்றும் உற்சவர்களின் தனிச் சன்னதி.

வலதுபுற விளிம்பில் அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு தனிச் சன்னதி.

மகா மண்டப துவார பாலகர்களைக் கடந்து உள்ளே சென்றால், அர்த்த மண்டபம். அங்கு உற்சவர் சீனிவாசர்.

கருவறையில் மூலவராக கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள். வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூமாதேவி. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மூவருமே நின்ற நிலையில் காட்சி அருளிக் கொண்டிருக்கின்றனர்.

கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவருக்கு வெட்டி வேர் மாலை வெகு விசேஷம். பின்புறம் யோக நரசிம்மர்.

தெற்கு மூலையில் பத்மாவதி தாயார், கருவறையின் பின்புறம் தன்வந்தரி என தனிச் சன்னதிகள்.

தன்வந்தரி பெருமாள் சன்னதியின் சுற்றுப்பாதையின் மூன்று புறங்களிலும் தரையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

வண்ண விளக்குகளுடன் கூடிய கண்ணாடி அறை.

உற்சவ காலங்களில் ஏகாந்த சேவை இங்குதான். பெருமாளும் கொடுத்து வைத்தவர். அதைக் காண நேரும் பக்தர்களும் கொடுத்து வைத்தவர்கள்.

முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில். அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள்.

பிரார்த்தனை:
கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கவும் , நோய் தீரவும் இங்கு மூலவரான கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணரை வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

செல்வ வளம் பெருக,சகல சௌபாக்யங்களும் வந்து சேர
கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்க, அனைத்து சம்பத்துக்களும் சேர,குபேர வாழ்வு பெற அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணனனை கீழ்க்கண்ட சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி மற்றும் கோபால சுந்தரி காயத்ரியை கூறி வேண்டிக்கொள்கின்றனர்.

ALSO READ:  அலங்காநல்லூர் - கோவிலூரில் உச்சி மாகாளியம்மன் உத்ஸவ விழா!

சம்மோஹன கிருஷ்ணர் ஸ்துதி (கோபால சுந்தரி)

ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்

த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்

பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா

சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்

இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை

ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்

ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!

பொருள்:

வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்

தல வரலாறு:

இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார்.

தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார்.பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார்.

புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு, “கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.

திருவிழா: புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Topics

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories