April 29, 2025, 12:49 AM
29.6 C
Chennai

கருணையும், உதவியும்: ஆச்சார்யாள் அருளுரை!

வாழ்க்கையில் நாம் விருத்தி செய்ய வேண்டிய முக்கிய குணங்களில் கருணை ஒன்று.

இன்பமும் துன்பமும் எல்லாருடைய வாழ்க்கையிலும் மாறி மாறி வருவதால் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

மற்றவர்களுக்கு உதவ ஒரு ஆர்வம் நமக்குள் ஏற்படுவதற்கு நமக்குள் கருணை இருக்கவேண்டும்.

பகவானுடைய கருணை எல்லையற்றதாக இருப்பதால் அவர் கருணைக்கடல் என்று வர்ணிக்கப்படுகிறார்.

லோகஸம்ரக்ஷணத்துக்காக அனேக அவதாரங்களை எடுக்க இந்த கருணைதான் பகவானை தூண்டுகிறது.

ஒருவன் கருணையால் மற்றொருவனுக்கு உதவும் பொழுது அதற்கு கைமாறு எதிர்பார்க்கக்கூடாது. அப்பொழுதுதான் அவன் ஸத்புருஷன் என்று அழைக்கத்தக்கவன்.

கருணையினால்தான் குரு தன் சிஷ்யனுக்கு உபதேசம் செய்கிறார் என்று ஆதிசங்கர பகவத்பாதர் கூறுகிறார். சிஷ்யன் குருவை பக்தியுடன் அணுக வேண்டும்.

ஏனென்றால் குரு ஒரு கருணைக்கடல். மற்றும் பிரஹ்மஞானிகளில் உத்தமமானவர் என்பது பொருள்.

ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் நற்குணமான கருணையை விருத்தி செய்து நடைமுறையில் கொண்டு வர வேண்டும்.

ALSO READ:  மழை வேண்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம்!

மற்றவர்களுக்கு செய்யும் சிறு உதவிக்கும் அதன் புண்ணியம் உண்டு. மற்றவர்களை பற்றி நல்லதை சொல்வதே ஒரு ஸத்காரியம். தனக்கு தீங்கு செய்ய வந்த ஒரு கபாலிகாவுக்கே ஆதிசங்கரர் கருணை காட்டினார். இது உன்னதமான கருணை.

குழந்தை பருவத்தில் இருந்தே சிறுவர்களிடம் கருணையை பதிய வைக்கவேண்டும். பள்ளியில் பயிலும் பொழுதும் தங்களுடன் படிக்கிறவர்களுக்கு எவ்வித சிறு உதவியையும் அளிக்க மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

இரண்டு மனிதர்கள் சண்டை போடுவதை நாம் பார்த்தால் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்த முயற்சிப்பது நம் கடமை. கருணை நிறைந்தவர்களால் தான் இம்முயற்சியில் ஈடுபட முடியும்.

நல்ல பதவியில் இருப்பவன் தகுதியுடன் தன்னைத் தேடி வந்தவர்களுக்கு நியாயமான உதவிகளை செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு நம் வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. அவைகளை தவறவிட்டால் வருத்தப்படவேண்டி வரலாம். அது அறிவில்லாமையும்கூட.

ஆதலால் எல்லோரும் மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து பகவதனுக்ரஹத்தை பெறுவார்களாக

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

ALSO READ:  மதுரை ஆலயங்களில் மஹா சிவராத்திரி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories