
அரசியலமைப்பு சட்ட தினம் 26.11.2021
– முனைவ கு.வை. பாலசுப்பிரமணியன் ~
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட உள்ளது: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு சட்ட தினம் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்வின் முன்னோட்டமாக, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு வி முரளீதரன் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்) ஆகியோர் 23 நவம்பர் 2021 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
26 நவம்பர் 2021 அன்று காலை 11:00 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இருந்து அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமை வகிப்பார்.
குடியரசு துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கைய்யா நாயுடு அவர்கள், பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள், சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சி சன்சத் டிவி/தூர்தர்ஷன்/ பிற தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு, அவருடன் நேரலையில் அரசியல் சாசனத்தின் முன்னுரையைப் படிக்க ஒட்டுமொத்த தேசத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகள், மாநில/யூனியன் பிரதேச அரசுகள், பள்ளிகள்/ கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்கள்/ நிறுவனங்கள்/ அமைப்புகள், பார் கவுன்சில்கள் போன்றவை கொவிட் 19 நெறிமுறைகளைப் பின்பற்றி, 26.11.2021 அன்று, அவர்களின் இடங்களிலிருந்து குடியரசுத் தலைவருடன் இணைந்து அரசியலமைப்பு சட்ட முகவுரையைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதை ஒரு பொது பிரச்சாரமாக மாற்றவும், மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதற்காகவும், இரண்டு இணையதளங்களை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
முன்னுரையை ஆன்லைனில் படித்தலுக்கான தளம் 23 மொழிகளில் (22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்ட ஜனநாயகம் பற்றிய வினாடிவினாவுக்காக (mpa.nic.in/constitution-day) தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் பங்கேற்று சான்றிதழ்களைப் பெறலாம்.