பூம்புகார் அருகே உள்ள
திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.
திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் வைணவ திவ்ய தேச 108 கோவில்களில் ஒன்றாகும். ஹிரண்ய மற்றும் யோக நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.
திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி இங்கு உள்ளது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலின் பங்குனி உற்சவம் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.
இதனை ஒட்டி பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் மேலும் தாளம் வழங்கிட பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.