பிள்ளைலோகாச்சரியார் (1205–1311 CE) இன்று அன்னாருக்கு இன்று திருநக்ஷத்திர உத்சவம் … ஐப்பசி திருவோணம் . வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர் .. இவரது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையும் சிறந்த ஆச்சாரியர் ,.
இவர் வைணவ க்ரந்தங்கள் பல சாதித்து அருளி இருக்கிறார் .. வைணவ ஆச்சாரியர்களிலே எனக்கு மனதில் நெருக்கமானவர் இவரே ..
ராமானுஜர் வாழ்ந்த 11 ஆம் நூற்றாண்டில் இருந்து பல பல ஆசிரியர்கள் வைணவ நூல்கள் , ஆழ்வார்களின் பாசுரங்களை அனுபவிக்க ஈற்றுப்படிகள் (வியாக்கியானங்கள் ) இயற்றி இருப்பினும் .. இவரது பணி அபிரிமிதமானது ..
1311 (or 1323??) ஆண்டு துலுக்கர்கள் ஸ்ரீரங்கத்திற்கு படை எடுத்து வந்து பன்னிரியாவர் (12,000 பேர்) தலை கொய்யப்பட்டு இறந்து அனைத்து கோவில் செல்வங்கள் கொள்ளையிடப்பட்ட பொது …
அரங்கன் மூலஸ்தானத்தை கல் திரை இட்டு .. அரங்கன் திருமேனியை தானே முன்னின்று எடுத்து கொண்டு மதுரை திசை நோக்கி சென்று ஜோதிஷ்குடி என்கிற ஊரில் .. வயோதிகம் காரணமாக .. அவர் சுமார் அப்போது 105 வயதினர் !!! அங்கேயே அரங்கன் அடி சேர்ந்தார் ..
இன்று இவ்வளவு பிருமாண்ட வைணவ முதன்மையான கோவிலான ஸ்ரீரங்கத்தின் மூல மூர்த்தியான அழகியமணவாள பெருமாளின் திருமேனியை அவ்வளவு வயோதிகத்திலும் காத்து நமக்கு அளித்து சென்று இருப்பது …
என்னை போன்ற சாத்திரங்கள் மற்றும் ஆசாரியர்களின் கிரந்தங்களில் பாசுரங்களின் சுவை அறிய இயற்றப்பட்ட ஈற்றுப்படிகளின் சிறப்புகளை அறியாத .. அரங்கனின் திருமேனி அழகை மட்டுமே… அறிந்து … பக்தி செய்ய மனம் கொண்ட சிறியோனாக இருப்பதால்
எந்த ஆச்சாரியரது பணியை விட பிள்ளைலோகாசாரியார் பணியை சிறப்பாக நான் கருதுகிறேன் ..
இன்று நாம் போற்றி வணங்கும் அழகிய மணவாள ரெங்கநாத திருமேனியை காத்து அளித்த பிள்ளை லோகாச்சரியாரை போற்றி வணங்குவோம் ..
ராமானுஜர் திருவடிகளே சரணம்