திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா
உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து
யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்.

thiruppavai pasuram 23 - 2026

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில், வேறு புகல் இன்றி உன் திருவடி அடைந்தோம் என்று ஆய்ச்சியர் சொன்னது கேட்ட கண்ணன், பெண்களே இவ்வளவு வருத்தம் அடைந்தீர்களே. உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குவது அன்றோ என் கடமை. அதை நீங்கள் உணர்வீர்களே. என்னிடம் வந்து முறையிட்டும் நான் உடனே வந்து உங்கள் கண்ணீரைத் துடைக்காது போனேனே! இனி உங்கள் வேண்டுதலைக் கேட்கின்றேன். சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண்கள், எங்கள் விருப்பம் இப்படி ரகசியமாகச் சொல்லுவதற்கு உரியதன்று. பெரும் கோஷ்டியாக இருந்து கேட்டருள வேண்டும். அதற்காக அந்த சிங்காதனம் ஏறக் கிளம்பு என்று பிரார்த்தித்தனர் இந்தப் பாசுரத்தில்.

மழைக்காலம் ஆகையால் வெளியே சுற்றித் திரியாது, மலைக் குகைகளில் பேடையும் தானும் ஒன்றுதானோ என்ற எண்ணம் தோன்றும்படி சிங்கம் உறங்காமல் ஒட்டிக் கொண்டு நிற்கும். வீரியமும் சீர்மையும் வாய்ந்த அந்த சிங்கமானது, உணர்ந்து எழுந்து, நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை அகல விழித்துப் பார்க்கும். தங்கள் இனத்துக்கே உரிய மணம் நிறைந்த உளை மயிர்களைச் சிலுப்பிக் கொண்டு நாலாப் புறங்களிலும் புடைபெயர்ந்து அசைந்து, உடலை உதறி சோம்பல் முறித்து கர்ஜனை செய்யும். அப்படி கர்ஜனை செய்து கொண்டு வெளியே புறப்பட்டு வரும் வலிமையான சிங்கத்தைப் போலே, காயாம்பூ நிறத்தை உடைய கண்ணபிரானே… நீயும் உன் திருக்கோயிலில் இருந்தும் இந்த இடத்துக்கு வரும்படி வெளிவந்து, அழகும் சீர்மையும் மிக்க இந்த சிங்காசனத்தில் எழுந்தருள்வாய். நாங்கள் மனதிலே நினைத்து வந்த எங்கள் விருப்பம் குறித்து நீ எங்களிடம் விசாரித்து அறிந்து கொள்வாய். பின்னர், அது நிறைவேறும்படி எங்களுக்கு அருள வேண்டும் என வேண்டினர் ஆய்ச்சியர்.

சிங்கம் பேடையைக் கட்டிக் கொண்டு கிடந்துறங்கும்போது அறிவிழந்திருக்கும். கண்ணனும் அவ்வாறே அடியாருக்காக உதவ எண்ணும் முன்னர் அறிவற்ற பொருளாகவே எண்ணப்படுவானாம். அடியார் நினைவு வந்தபோது அவன் அறிவுற்று எழுவானாம். அறிவுற்றுத் தீவிழித்து எனும் பதத்தால் இதனை உணர்த்துகிறார் ஸ்ரீஆண்டாள்.

யாம் வந்த காரியம் இப்போதே சொல்லுதற்கு அன்று என்றனர். எங்கே முதலிலேயே சொல்லிவிட்டால் சர்வ சுதந்திரனாகிய கண்ணன் மறுத்துவிடுவானோ என்ற அச்சம். அதனால், சிற்றஞ்சிறுகாலே பாசுரம் வரை கொண்டுசென்று, தங்கள் விருப்பத்தை, வேண்டும் பறையைத் தெரிவிக்கின்றனர்.

விளக்கம் செங்கோட்டை ஸ்ரீராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories