திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
srirangam paramapathavasal2 - 2026

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு உத்ஸாகத்துடன் நடைபெற்றது. திருவரங்கம் அத்யயன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது.

வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. எல்லாத் தலங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும், பூலோக வைகுந்தமான திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் தான் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

srirangam paramapathavasal - 2026

பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக நேற்று மதியத்திலிருந்தே அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். பரமபதவாசல் திறக்கப்பட்டதும் ‛ரெங்கா ரெங்கா’ என பக்தர்கள் பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

For More Pictures: 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.