தைப்பூசம்… அதிகாலை 3 மணி முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
thiruchendur - 2026

தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா களைகட்டியது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நடைப்பயணமாகவே திருச்செந்தூர் சென்று வந்தனர்.

குறிப்பாக நெல்லை திருச்செந்தூர் சாலையிலும் தூத்துக்குடி சாலையிலும் நடைப்பயணமாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.