தக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்!

Published:

srirama bathrachala - 2026தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது. இன்று ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் அபிஜித லக்ன சுப முகூர்தத்தில் சீதாராம கல்யாணம் வைபவமாக கண்ணிற்கு விருந்தாக நடந்தது. அர்ச்சகர்களின் வேத மந்திர உச்சாரணையால் நகரம் முழுவதும் பவித்திரச் சூழல் நிலவியது.

கோதாவரி நதிக் கரையில் அமைந்திருக்கும் பத்ராசலம் கோவில் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

ஞாயிறு காலை ஒன்பதரை மணியளவில் தெய்வீக தம்பதிகளின் உற்சவ மூர்த்திகளை மிதிலா மைதான மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்தார்கள். மணப்பெண்ணாக நாணத்தோடு புன்னகை மிளிர அருள்பாலித்தபடி சீதா தேவி வந்தமர்ந்தாள்.

மேள தாளங்களும் ராம நாம கோஷங்களும் முழங்க இன்று காலை 9.30 மணிக்கு சீதா ராம விவாஹ உற்சவம் ஆரம்பமானது.

பத்ராசல ராமதாசர் சமர்பித்திருந்த அணிகலன்களை பக்தர்களுக்குக் காண்பித்து பின் மணமக்களுக்கு அணிவித்தனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

நேற்று சனிக்கிழமை இரவு ராமாயலத்தில் எதுர்க்கோலு உற்சவமும் கருட சேவையும் கண்ணிற்கு விருந்தாக நடந்து முடிந்தன.

கோதாவரி நதியிலிருந்து சிறப்பாக குடத்தில் நீரெடுத்து வந்து அங்குரார்ப்பணம் செய்தார்கள்.

மாப்பிளை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கல்யாண சுப முகூர்த்தத்தில் மணப்பெண் சீதா தேவியின் தலை மேல் ஜீரகவெல்லக் கலவையை வைத்து பின்னர் மாங்கல்ய தாரணம் செய்தார்.

தெலங்காணா அரசு தரப்பில் அமைச்சர் இந்திர கிரண் ரெட்டி வந்திருந்து தெய்வீக மணமக்களுக்கு பட்டு வஸ்திரங்களும் முத்யால தலம்பராலுவும் சமர்ப்பித்தார்.

நாளை 15ம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை சம்பிரதாய வைபவத்தோடு தேவஸ்தானம் முன்னின்று நடத்த இருக்கிறது.

ஆலயம் மின் விளக்கு அலங்காரத்தோடு வைகுண்டம் போல் ஜொலித்தது.

srirama bathrachala3 - 2026

உற்சவ ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அறநிலையத் துறை கமிஷனர் அனில்குமார் கவனித்து வருகிறார்.

ஆண்டுக்கொருமுறை ஸ்ரீராம நவமியன்று பத்ராசலத்தில் மிக மிக வைபவமாக நடக்கும் ஸ்ரீசீதாராமசந்திர மூர்த்தியின் கல்யாணத்திற்காக அதிகாரிகள் அனைத்தும் சித்தமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரிய அளவில் திரண்டு வந்திருந்த பக்தர்களுக்கு எந்த வித சிரமமும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு செய்திருந்தனர். நாளை நடக்க இருக்கும் மகா பட்டாபிஷேகத்திற்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

வெயில் அதிகமாக இருந்ததால் மிதிலா மைதானத்தில் ஏர்கூலர்களும் மின் விசிறி வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

நகரில் எங்கு நோக்கினும் பக்தர்களின் கோலாஹலம். பத்ராசலத்தில் நேற்று சனிக்கிழமை முதலே எங்கு பார்த்தலும் பக்த ஜனங்களே! ராமாலய சுற்றுப் புரங்கள், கோதாவரி குளியல் துறைகள், கரைக்கட்டு, பேருந்து நிலையம், அம்பேத்கார் செண்டர், பிரிட்ஜ் செண்டர்…. இப்படி எங்கு பார்த்தாலும் பக்த ஜனங்களால் நகரம் பொங்கி வழிகிறது. எங்கு நோக்கினும் பச்சைத் தோரணங்கள், தண்ணீர் பந்தல்கள்.

மிதிலா ஸ்டேடியம் நிரம்பி வழிந்ததால் வெளியில் நின்று பார்ப்பதற்கு ஏதுவாக பெரிய டிவி திரைகளை அமைத்திந்தார்கள். பக்தர்களுக்கான வசதி நிலையங்கள், குடி நீர் வசதிகள் எல்லாம் சிறப்பாக செய்திருந்தார்கள்.

srirama bathrachala2 - 2026கோதாவரி ஸ்நான கட்டங்களிலும் விஸ்தா காம்ப்ளெக்ஸ் அருகிலும் ஹாமியானா பந்தல்களை பெரிய அளவில் கட்டியிருந்தார்கள். மாட வீதிகளிலும் மற்றும் எல்லா இடங்களிலும் பதர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்கள் அமைத்திருந்தார்கள்

கல்யாணத்தைக் கண்டுகளிக்க தெலங்காணா, ஆந்திரப் பிரதேஷ், சத்தீஸ்கட், ஒடிஸா, தமிழ்நாடு முதலான மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டு வந்திருந்தனர். திருமணத்தைக் கண்டு பக்திப் பரவசத்தில் மூழ்கினர். சகல பக்த ஜனங்களும் லோக கல்யாணமாக பாவித்து பார்த்து மகிழும் ஸ்ரீசீதா ராம கல்யணம் கண்ணிற்கு விருந்தாக நடந்து முடிந்தது. ஜெய் ஸ்ரீராம்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

-ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img