தஞ்சைப் பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்

tanjavore temple ther festival - 2026

சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

மேல ராஜவீதியில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பலவகையிலும் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.