தென்காசி: வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பண மதிப்பிழப்பு,
போர் விமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் கூறினார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் மகிளா காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நாகம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சி ராணி கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதால் மகிளா காங்கிரஸ் சார்பில் 5 மண்டலங்கள் என பிரித்து நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக தொரிவித்தார்
மேலும், பிரதமர் மோடி கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக வாக்குறுதி கொடுத்தார் பணமதிப்பிழப்பு, போh; விமானம் குறித்து ராகுல் காந்தி உட்பட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து பதில் எதுவும் கூறாமல் இருப்பது அவர்களது தோல்வியை ஒப்புகொள்வதற்கு சமம். வருகிற நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று இதற்கான பதில்களை அளிக்க வேண்டும் என்று கூறினார்.




