
ஸ்டாலின் – அழகிரி மோதல் என்பது, அவர்களின் உட்கட்சிப் பிரச்னை என்று நழுவினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது பாமக.,வினரால்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 48 புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, பாமகவினரால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அழகிரி-ஸ்டாலின் மோதல் அவர்களின் உட்கட்சி பிரச்னை, திமுக போல், அதிமுக அல்ல! தாங்கள் ஜனநாயக முறைப்படி செயல் படுபவர்கள் என்றார் முதலமைச்சர்.
முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதம் அடைந்த பகுதி இன்னும் முன்று தினங்களில் சரி செய்யப்படும் என்றும், அணை முழுமையாக உடைந்துவிடும் என்று கூறப்படுவது தவறான தகவல் என்றும் கூறினார் முதல்வர்.




