December 5, 2025, 9:04 PM
26.6 C
Chennai

“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா?ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?..”

“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா?
ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?..”
 
சொன்னவர்-D.ஜானகிராமையா.17352237 1601442589873347 7280143330772355007 n 1 - 2025
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
நான் கோவில் பொறுப்பு ஏற்றபோது,
(காமாக்ஷி கோவில் ஸ்ரீகார்யம்)
வருமானமே இல்லை.உண்டியல்
வைத்தால், ஸ்தானீகர்களுக்குப் பாதித்
தொகை போயிடும்.அதனாலே,நித்யபூஜா
தர்ம உண்டியல்-என்று வைத்தோம்.
வருஷத்துக்கு ஒரு தடவை உண்டியலைத்
திறப்போம்.முப்பதாயிரம்,நாப்பதாயிரம் தான்
இருக்கும். மளிகைக்கடை,பூக்கடைக்கு அப்போ
தான் பாக்கிப் பணம் பட்டுவாடா செய்வோம்.
அதுவரை அவர்களும் பொறுமையா இருப்பா.
 
ஒரு சமயம் பெரியவாகிட்ட,
“கோவில் செலவுக்குப் பணம் போறல்லையே?
நுழைவுக் கட்டணம் வைக்கட்டுமா?”ன்னு
கேட்டேன். பெரியவாளுக்குக் கோபமான கோபம்!
 
காசு தொடாத சந்யாஸி,அம்பாள் தரிசனத்துக்கு
வந்தா,பணத்துக்கு எங்கே போவார்?
 
“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா?
ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?..
நியாயமேயில்லை. ‘என்ட்ரன்ஸ் கட்டணம்
வாங்கக் கூடாது’ என்று கண்டிப்பா சொல்லிட்டா.
 
காமாக்ஷிக்கு லலிதா ஸஹஸ்ரநாம தங்கக்
காசுமாலை இருக்கு. பெரியவா பண்ணிப் போட்டா.
எப்படிப் பண்ணினா, தெரியுமோ? ஒரு விளம்பரம்
கிடையாது. வாய் வார்த்தையா ஒவ்வொருத்தரா
கேட்டுக் கேட்டே, பண்ணினா!
 
“ஜானகிராமா, காசுமாலை ரொம்பக் கனமா இருக்குமே?
 
காமாக்ஷிக்குத் தோளில் போட்டா, வலிக்கும் இல்லையா?
 
அதனாலே, திருவாசியில் கொக்கிபோட்டு மாட்டும்படி ஏற்பாடு செய்..”
 
சிலா மூர்த்தமாக இருந்து அருள்பாலிக்கும் காமாக்ஷிக்குக் கனக்கும்-என்று, பெரியவாளின் மிருதுவான உள்ளம் கவலைப்பட்டது. சாட்சாத் அம்பாளாகவே,மூர்த்தத்தைத் தரிசித்தவர் தானே,ஸ்ரீசரணர்கள்.
 
இதைக் கேளுங்கோ.இதே மாதிரி இன்னொரு சம்பவம்.
 
சின்னக் காஞ்சிபுரம் ஆனைக்கட்டித் தெரு மடத்தில்
இருந்தபோது, பெரியவாளுக்குக் கனகாபிஷேகம்
நடந்தது. அந்தத் தங்கத்தைக் கொண்டு, காமாக்ஷியின் தாமரைத் திருவடிகளுக்கு ஸ்வர்ண கவசம், மற்றும் ஆதிசங்கரர் மூர்த்தத்துக்குக் கவசம் செய்ய உத்திரவாயிற்று.
 
பொதுவாக, தங்கக் கவசம் என்றால், செம்பினால் கவசம் அளவாகச் செய்து, அதன்மேல் தங்கரேக்குப் பதிப்பார்கள்- பக்தர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக. ஆனால்,மகா ஸ்வாமிகள் என்ன செய்தார்?
 
“ஜானகிராமா,ஆசார்யாள் மேனியிலே ஸ்வர்ணம் படணும். அதனால் செப்புக் கவசத்துக்கு உட்புறத்திலேயும் தங்கரேக்கு பதிக்கச் சொல்லு.
 
“ஆம் அத்தனை குருபக்தி!
 
காமாக்ஷி கோவில் ஆதிசங்கரர் சிலாமூர்த்த
ஸ்வர்ண கவசம்,பெரியவா உத்திரவுப்படியே தான்
செய்யப்பட்டது.உள்ளும் புறமும் ஸ்வர்ணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories