December 6, 2025, 2:12 PM
29 C
Chennai

“ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்ம பிரதட்சிணம் தானா?

“ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்ம பிரதட்சிணம் தானா?
(நந்தனார் பரம்பரை.-யானுக்கு கிடைத்த . தரிசனம்) 12509614 1102529786458852 1440235304742122547 n 2 - 2025

.(இந்த நிகழ்ச்சியில் உடனிருந்த தொண்டர்கள் .உருகிப் போய்விட்டார்களாம் ..ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள் பார்வையில் அவன் பரமேசுவர பக்தன்; பின் வேறு என்ன தகுதி வேண்டும்?)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
..

கிராமதேவதை கோயிலுக்குப் போய்விட்டு, ஸ்ரீமடம் முகாம் செய்திருந்த இடத்துக்கு (அந்தணர் தெரு) வந்து கொண்டிருந்தார்கள் பெரியவாள் , உடன் ஏழெட்டுப் பேர்கள் மட்டும் வந்தார்கள்.

வழியில் ஒரு வாய்க்கால் மதகு,இருபுறமும் இரண்டடி உயரத்துக்கு சிமெண்ட் சுவர், அவற்றில் ஒன்றில், பரங்கிக்காய் ,பூசணிக்காய் ,தேங்காய் அவரைக்காய் .,இளநீர்,வேர்க்கடலை- எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.

கோயிலுக்குப் போகும்போது இல்லாத இந்தக் காய்கறிகள் இப்போது எப்படி வந்தன?” என்று எல்லோருக்கும் ஒரு சின்ன ஆச்சரியம்.

ஆனால், அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த மதகுச் சுவர் அருகில் பெரியவா சற்று நின்றார்கள்.

பதினைந்தடி தூரத்தில் அடக்க ஒடுக்கமாய், பக்திப் பரவசமாய்,கைகளைக் கட்டிக் .கொண்டு …ஒரு.. திருக்குலத்துத் திருத்தொண்டன்.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் கீழே உருளத் தயாராக இருந்தன.

பெரியவாள்,ஒரே இடத்தில் சிலை போல நிற்காமல்,இப்படியும் அப்படியுமாக நாற்புரமும் திரும்பியவாறே தொண்டர்களிடம் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஆமாம் அந்த நேரத்துக்குச் சம்பந்தமில்லாத குழந்தைத்தனமான பேச்சுக்கள்.

இந்தப் பேச்சுக்கு இப்போது என்ன அவசியம்?

பின்னர், ” இதெல்லாம் எதுக்காக இங்கே வெச்சிருக்கான்னு கேளு” என்றார்கள்.

கேட்டார், ஒரு சிஷ்யர்.

“சாமிக்குத்தான் வெச்சிருக்கேன்; எல்லாம் தோட்டத்திலே வெளைஞ்சது…சாமி கோயிலுக்குப் போறதைப் பார்த்தேன். இந்த வளியாகத்தானே திரும்பி வருவாங்கன்னு, ஓடிப்போயி வூட்லேந்து கொண்டாந்தேன் …நான் பாலு,தயிரு கொடுத்தா சாப்பிடமாட்டாங்களே…இதுகளை சாப்பிடுவாங்க இல்லையா…?”

பெரியவா,சிஷ்யர்களிடம் கைஜாடையால் அந்தக் காய்கறிகள் எல்லவற்றையும் எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.

“குகன் கொடுத்ததை இராமன் ஏற்றுக்கொண்ட மாதிரி…! அவன் நமக்கு முன்மாதிரி! நாளைக்கு இதெல்லாம் சந்த்ரமௌளீஸ்வரருக்கு அர்ப்பணம்.” (‘அவன்’ என்றது ராமனை)

பத்தடி சென்று,நடையை மெதுவாக்கி .,தற்செயலாய்த் திரும்பிப் பார்ப்பதைப் போல ஒரு விநாடி நேரம் அவனைப் பார்த்தார்கள ..அவன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

ஐந்து நிமிஷம் பெரியவாள் பேசவில்லை.

“ஏண்டா, என் முன்னாடி நமஸ்காரம் பண்றவாளுக்கு என் முதுகு தெரியுமோ?”

“தெரியாது”

“முதுகைப் பார்க்கணும்னா என்ன பண்ணணும்?”

“பெரியவாளைப் பிரதட்சிணம் பண்ணணும்,,”

ஒரு நிமிஷம் கனமான இடைவெளி.

“…இல்லேன்னா அவன் எதிரிலே நான் ஆத்ம பிரதட்சிணம் பண்ணணும்…அப்போ, முன்னே, பின்னே,பக்கவாட்டிலே பார்க்கலாம் இல்லையா?”

சிஷ்யர்களுக்குப் பொட்டில் தெறித்தது.

மதகுச் சுவர் அருகே நின்று, ஆடிய ஆட்டமெல்லாம் ஆத்மபிரதட்சிணம் தானா?

யாருக்காக? எந்த ஒரு சிவபக்தனுக்கு, தன் சுயஸ்வவரூபத்தைக் காட்டினார்கள்…?

அவன்…அவன்….அவனுக்காக….

கறிகாய்களைத் தூக்கிச்சென்ற சிஷ்யர்களுக்கு அவைகள், சபரிப்பாட்டி ராமனுக்குக் கொடுத்த கனிந்த பழங்கள் போல் தோன்றின.

பூசணிக்காய் சிவலிங்கமாகத் தோன்றியது; பூசணிச் சாம்பல் திருநீறாக வெண்ணித்தது.

முகாம் தங்கியிருந்த வீடு வந்துவிட்டது.

“அவன்…நந்தனார் பரம்பரை…”என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் பெரியவா.

இந்த நிகழ்ச்சியில் உடனிருந்த தொண்டர்கள் உருகிப் போய்விட்டார்களாம்.ஒரு ஸோமயாஜிக்கோ, சமஸ்தான அதிபதிக்கோ கூட இம்மாதிரி தரிசனம் கொடுத்ததில்லையாம். பெரியவாள் பார்வையில் அவன் பரமேசுவர பக்தன்; பின் வேறு என்ன தகுதி வேண்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories