“இன்று மணி அய்யர் முக்தி நாள்.08-06”
( “நான் தாளம் போடுகிறேன்,நீ பாடு!” என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட்ட பெரியவா)

17-11-2012 கல்கியில் வந்தது.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஒருமுறை காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, “மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா” என்று சீடர்களிடம் விசாரித்தார்.அது காலை நேரம்.வீட்டில்தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில்
இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மணி அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது.
மகா பெரியவரை பக்தியுடன் வரவேற்றார்.
“ம்….பாடு!” என்றார் மகா பெரியவர்.
“நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை,பெரியவா!” என்று சமாளித்தார் மணி அய்யர்.
“நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன்.
குளிக்காவிட்டாலும்ழ்பரவாயில்லை..பாடலாம்!”
,,என்றார்.
“மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா….”
என்று இழுத்தார் மணி அய்யர்.
“நான் தாளம் போடுகிறேன்,நீ பாடு!”
என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்துவிட்டார் மகா பெரியவர்.
வேறு வழி இல்லை.காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்ய



