December 5, 2025, 9:57 PM
26.6 C
Chennai

ருஷி வாக்கியம் (62) – ஆண் பெண் உறவும் குடும்ப அமைப்பும்!

rv2 4 - 2025
ஆண் பெண் உறவு பற்றி நம் ரிஷிகள் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் காணப்படுகின்றன. ஒரு சிறப்பான அமைப்பை ஏற்படுத்துவதற்காக ரிஷிகள் அப்படிப்பட்ட உயர்ந்த வாக்கியங்களைக் கூறியுள்ளார்கள்.

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் அவசரப்பட்டு சீக்கிரமாக பிரிந்து போக வேண்டும் என்று எந்த ஆவேசம் உள்ளதோ அது பின்னர் பெரிய ஆபத்தில் முடியும். அப்போதைக்கு எல்லாம் நன்றாக இருப்பதாகவே தோன்றும். ஏனென்றால் இளமையோ உடல் வலிமையோ எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. அது சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கும். அதே போல் மானசீக வளர்ச்சி கூட காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். அதனால் அப்போது தோன்றும் தாற்காலிகமான சுகத்திற்காக ஆவேசத்தால் பிரிந்து போக நினைப்பது சரியல்ல.

வீட்டுப் பெரியவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள் என்றால் அந்த விவாகம் சிதறிவிடாமல் காப்பதற்காகவே! அதனால் இருபுறமும் இருக்கும் பெரியவர்களின் பொறுப்பு என்னவென்றால் அந்த ஆணையும் பெண்ணையும் மரணம் வரை சேர்த்து வைக்க வேண்டும் என்பதே! இது குறித்த தெளிவான தர்மசாஸ்திர வாக்கியம் காணப்படுகிறது.

“அன்யோன்யஸ்ய அப்யபிசார:…… ஆமரணாந்திக: !“ ஆண் பெண் இருவருக்கும் திருமணம் ஆன உடனே தீர்மானமான ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும். உண்மையில் விவாகத்திற்கான முயற்சியை ஆரம்பிக்கும்போதே…. இளமை தொடங்கும் வேளையிலேயே…. அவர்களுக்கு கணவன் மனைவி என்ற ஆலோசனை ஏற்படும்போதே…. பெற்றோர் அவர்களிடம் ஏற்படுத்த வேண்டிய சிறந்த எண்ணம் என்னவென்றால் திருமணம் என்று நடந்து விட்டால் மரணம் வரை பிரியக் கூடாது என்ற எண்ணத்தை திடமாக பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது.

அந்தப் பொறுப்பைப் பற்றி தர்ம சாஸ்திரத்தில் இவ்விதம் கூறுகிறார்கள், “அந்யோன்யஸ்ய அப்யபிசார…” அதாவது “இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும். ஒருவரை விட்டு இன்னொருவரின் சிந்தனை வேறாக இருக்க கூடாது”. அவ்வாறு எப்போது வரை வாழ வேண்டும்? “ஆமரணாந்திக:” மரணம் வரை அவ்விதமாகவே இருக்க வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட நன்மையும் பாதுகாப்பும் ஏற்பட வேண்டுமென்றால் அவர்கள் சாகும் வரை சேர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்திருக்கும் கணவன் மனைவியே நல்ல பெற்றோராக இருக்க முடியும். அப்படிப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளே நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள்.

எனவே குடும்ப நலனுக்காக பொறுமையாக விட்டுக் கொடுத்து வாழும்படியாக பெற்றோர் பிள்ளைகளை நன்கு வளர்க்க வேண்டும். இப்போது நல்ல உத்தியோகம் பெறுவதற்கும் நிறைய சம்பாதிப்பதற்கும் தேவையான புத்திசாலித்தனத்தை சொல்லி தருகிறார்களே தவிர இதுபோன்ற வாழ்க்கை பற்றி பெற்றோர் புரிதல் ஏற்படுத்துவதில்லை என்றே கூற வேண்டும்.

ஒரு முறை திருமணம் என்று ஒன்று நடந்து விட்டால் அந்த ஆணும் பெண்ணும் இறக்கும்வரை சேர்ந்து இருக்க வேண்டும் என்பது பாரதீய விவாக அமைப்பில் உள்ள மிகச் சிறந்த அம்சம். இதுவே உலகம் பாராட்டும் உயர்ந்த அம்சம்.

அப்படிப்பட்ட குடும்ப அமைப்பு தற்போது சிதறிப் போகும் சூழல் தென்படுகிறது. இவ்விஷயத்தில் மீண்டும் நாம் தர்ம சாஸ்திரம் கூறும் எச்சரிக்கையை கவனிக்க வேண்டும். இது போன்ற தர்ம சாஸ்திரங்களை ஒதுக்கிவிட்டு எத்தனை தெய்வங்களை பிரார்த்தனை செய்தாலும் பலன் இருக்காது.

தர்ம மயமான வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கைக்கு விவாக அமைப்பு என்பது இன்றியமையாத அடித்தளம். அதுவே சிதறி விட்டால் இனி குடும்பம் என்ற மாளிகை விழுந்துவிடும். சிறந்த சமுதாயத்திற்கு குடும்ப அமைப்பு இன்றியமையாதது. குடும்பத்திற்கு சிறந்த விவாக பந்தம் அத்தனை முக்கியமானது.

“ததா நித்யம் வ்யதேயதாம்…” – “அவர்கள் பிரிந்து போகாமல் இருக்கும்படி எப்போதும் முயற்சிக்க வேண்டும்”. “எதே யதாம்” – “பிரயத்தினம் திடமாகச் செய்ய வேண்டும்”.

பலவிதமாக கருத்துகளில் ஏற்படும் மாற்றங்களால் தாற்காலிகமாக மனோ பாவனைகளில் ஆவேசம் ஏற்பட்டு பிரிந்து போக வேண்டும் என்று தோன்றக்கூடும். ஆனால் அந்த நிலைமையில் பெரியவர்கள் முயற்சித்து அவர்களிருவரும் விலகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது தர்ம சாஸ்திரம்.
rv1 5 - 2025
குடும்பத்திற்கு பெற்றோரே பெரியவர்கள். அதாவது முதலில் கணவன் மனைவியாக இருப்பவர்கள்தான் பிறகு தாய் தந்தையாக மாறுகிறார்கள். அதனால் பெற்றோர் கூட தம் பிள்ளைகள் விவாக வயது வரும்போது அவர்களும் கணவன் மனைவி ஆவார்கள். பின் தாய் தந்தை ஆவார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும். பெற்றோராக மாறிய கணவனும் மனைவியும் தம் பிள்ளைகளுக்கு வேறுவேறாகத் தென்படாமல் ஒன்று சேர்ந்து தென்பட வேண்டும் என்ற உத்தேசத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் சமுதாயத்தில் இன்று வெறும் பொருளாதாரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அதன் மூலம் கிடைக்கும் போகங்களை மட்டுமே எண்ணி மகிழ்கிறோம். கஷ்டப்படுவதற்கு ஒருவரும் முன் வருவதில்லை. ஆனால் வாழ்க்கை முழுவதும் ‘பரிமாறிய இலை’ போல் இருக்காது. இன்று நாம் கஷ்டப்படுவதற்கு விருப்பமின்றி சுகங்களுக்காக உறவுகளை முறித்துக் கொண்டால் நாளை நாம் வேண்டாம் என்றாலும் நம்மீது வந்துவிழும் கஷ்டங்களிலிருந்து நம்மை ஆதரிப்பவர் யார் இருப்பார்கள்? இதை எண்ணிப் பார்க்க வேண்டும். கஷ்டங்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியாது.

சுகமான வாழ்க்கை வாழ்வதற்கு முயற்சிக்கலாமே தவிர தர்ம வழியில் நடப்பதற்கு கடினமானவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழும்போது சில சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு சேர்ந்து இருப்பது என்பது இந்த உலகில் கடினம்தான்.

ஆனால் சில தேவைகளுக்காகவும் சில தர்மங்களுக்காகவும் சேர்ந்து இருப்பார்கள். அதனால் மனிதர்களை நிலை நிறுத்துபவை தேவைகளும் தர்மங்களுமே!

ஓரொருமுறை தேவைகள் தாமாகவே தீர்ந்து விடுவதால் உறவுகளை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டாம் என்று தோன்றலாம். அவ்வாறு வாழ்வின் தேவைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளும்போது பந்தங்களை விலக்கிக் கொள்கிறார்கள். தேவைகள் உறவுகளைச் சேர்த்து வைக்க இயலாமல் போவதால் பந்தங்களை சேர்த்து வைப்பதற்கு வேறு ஒன்றின் தேவை ஏற்பட்டது. அதன் பெயரே தர்மம்.

அதனால் தேவைகளை தாமே தீர்த்துக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தாலும் கூட தர்மத்துக்கு கட்டுப்பட்டு கணவன் மனைவி சேர்ந்து குடும்பமாக வாழ வேண்டும். அதனால் உறவுகளை சேர்த்து வைப்பதிலும் அமைப்பை உருவாக்குவதிலும் பொருளாதாரத் தேவைகளை விட தார்மீகமான சூழல் மட்டுமே வெற்றிகரமாக வேலை செய்கிறது.

இவ்விதம் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு யுக யுகங்களாக பாரதீய குடும்ப அமைப்பு காப்பாற்றப்பட்டு வருகிறது. அதனால் கணவன் மனைவி இறப்பு வரை சேர்ந்து வாழவேண்டும் என்பது பிரதானமான இன்றியமையாத சூத்திரம். இதனை மறக்கக்கூடாது. இதன் மீதுதான் சனாதன தர்மம் என்ற மாளிகை ஆதாரப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வோமாக! அதுவே சர்வ தர்மங்களுக்கும் மூலம்! சர்வ நலன்களுக்கும் ஆதாரம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories