“கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்”
(சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLANDஎன்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது. இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து பெரியவா சொன்னால் திகைப்பு அடங்கவே அடங்காது_
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
30-03-2012ல் போஸ்ட் ஆனது.
கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக் கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர் அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால், முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.
அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன் யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்திஎன்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்.. ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான்.
ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும்.
தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்டகுதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில் கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல்கட்டிவிட்டான். அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறுபிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம்வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்துஅவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்தநூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்துஅவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.

சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLANDஎன்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND
எனப்படுகிறது. இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து
பெரியவா சொன்னால் திகைப்பு அடங்கவே அடங்காது



