spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பக்தர்களின் கண்ணீரில்... புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நவபிருந்தாவனம்!

பக்தர்களின் கண்ணீரில்… புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நவபிருந்தாவனம்!

- Advertisement -

குருவாரமான நேற்று வியாழக்கிழமை அதிகாலை கர்நாடக மாநிலம் கொப்பல் அருகில் துங்கபத்திரா நதிக் கரையில் உள்ள ஆனேகுந்தி – நவபிருந்தாவனத்தில் பூஜைகளைச் செய்யச் சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி. நவபிருந்தாவனத்தை விஷமிகள் சிதைத்திருந்தார்கள்.

இந்நிலையில், மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அன்பர்கள் அங்கே கூடி, மீண்டும் பிருந்தாவனத்தை புனர் நிர்மானம் செய்ய உறுதி பூண்டார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று காலை புனரமைக்கப்பட்டு நிறைவு செய்யப் பட்ட வியாசராஜரின் பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இது குறித்து அன்பர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். அந்தக் கருத்துகளில் முத்தான மூன்று கருத்துகள் இங்கே…! 

ஸ்ரீ வியாஸராஜரின் பிருந்தாவனம் மீண்டும் புனர்நிர்மானம் செய்தாகிவிட்டது. பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. அதுவும் மிக குறைந்த நேரத்திலேயே விஷயம் கேள்விப்பட்டு ஒன்றிணைந்து செயல்பட்ட அனைவருக்கும் வெறும் நன்றிகள் சரியாகாது!

கிளைகள் வேறாக இருப்பினும் வேர் ஒன்றுதான் என்பதை நிரூபிப்பது போன்று, சில மடங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பேதங்கள் இருந்தபோதும், மடத்தின் பீடாதிபதிகளும் விஷயம் கேள்விப்பட்டவுடன் சிஷ்ய பரிவாரங்களுடன் உடனே வந்து வேலையில் இங்கியது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.

இதுதான் இன்றைய சூழலுக்கு தேவை. ஆம் மஹான் குரு ஸ்ரீ வியாஸராஜர் தன்னையே வருத்திக் கொண்டு பெரும் பாடத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்பது தான் உண்மை.

இப்பொழுது எப்படி அனைவரும் சேர்ந்தனரோ அதேப்போன்று மடங்கள் (சிஷ்யர் களால்) தங்களுக்குள் நடத்தும் வேற்றுமையையும், அந்த நவபிருந்தாவனத்தின் இடத்தின் மேல் போடப்பட்ட உரிமை வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும்.

ஸ்ரீ பிரஹலாதராகவும், ஸ்ரீ வியாஸராஜராகவும் அவதரித்து அந்த இடத்தில் தவம் செய்த மஹான் ஸ்ரீ வியாஸராஜரே வேற்றுமையில் இருந்த சில மடங்களை ஒன்றிணைத்து அனைத்து பீடாதிபதிகள் மூலமாக தன்னை புனர்நிர்மானம் செய்து கொண்டுள்ளார். இதையே அனைத்து ஹிந்துக்களும் பெரும் படியாக எடுத்துக்கொண்டு சனாதனத்தை காப்பாற்ற ஒன்று கூடவேண்டும்.

– நரஹரி ராவ்.

ஒரு புண்ணியத் தலம் உடைக்கப்படுகிறது.. 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. வ்யாஸராஜரின் பேரருள் பெற்றது. நவ பிருந்தாவனத்தை தரிசித்தவர்களுக்கு தெரியும்! ரோடு வழியாகவும் படகின் வழியாகவும் சென்று தரிசிக்க வேண்டிய 9 ப்ருந்தா வனங்கள்! வெயில் காலத்தில் ஒரு சுற்று வருவதற்குள் கால் கொப்புளித்து விடும்! அதையும் மீறி வரும் பக்தர்கள் உணர்வது ஒரு மன நிம்மதியை! சரி… ராயர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை!

அப்பேர்ப்பட்ட இடம் மாபாவிகளால் உடைத்து எறியப்பட்ட விஷயம் பரவியவுடன் வேதனைப் பட்டவர் அநேகம்.. என்னைப் போல் பலர் விக்கித்து நின்று விட்டோம்! ஆனால் ஒரு கல்லெறி கூட இல்லை ! பெரும்பான்மையினருக்கு சுதந்திரம் பறிபோய் விட்டது என்கிற அரற்றல் இல்லை. கவரேஜ் செய்ய எந்த ஆபிரஹேமிய மீடியாவும் வரவில்லை.! ஆங்கில தினசரிகளில் பிரபலங்கள் இங்கு இருக்கவே பயமாய் இருக்கிறது, மத சுதந்திரம் பறிபோய் விட்டது என்கிற பேட்டிகள் இல்லை!

ஒரு வீடு அரசு அலுவலகம் எதுவும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை; எங்கும் ஒரு சிறு ரத்தம் கூட சிந்தவில்லை! பஸ்கள் உடைக்கப்படவில்லை! இதே மற்ற மத வழிபாடுத் தலங்களில் ஒரு கண்ணாடி பெயர்ந்து இருந்தால்கூட ஆகும் விளைவுகளை நான் விளக்க வேண்டியதில்லை! இங்கே ஒரு சிறு பதற்றம் கூட இல்லை! மனதில் வேதனை இருந்தாலும் அனைவரும் செயலில் இறங்கினார்கள். ஒருவர் ஒருவராக குழுமினர். கல் கல்லாக அடுக்கி இதோ 32 மணி நேரத்தில் பிருந்தாவனத்தை கட்டி எழுப்பி விட்டார்கள்.

இதுதான் இந்துக்களின் உறுதியான மென் சக்தி. காலம்காலமாக இந்து மத தலங்கள் நிர்மூலமாக்கப்பட்டாலும் புனருத்தாரணம் செய்ய முடியும் என்கிற ஆன்ம பலம். 17 முறை சோமநாதர் ஆலயம் எழுந்து நின்றதும், வருடக் கணக்கில் வழிபாடு நின்று போன மதுரை மீனாட்சியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் மீண்டும் குடமுழுக்கு கண்டு அருட்பாலிக்கும் அற்புத ஆற்றல்!

எங்கள் கோவில்களை, தெய்வங்களை நீங்கள் நிர்மூலமாக்கினாலும் எங்களுக்கு காலம் வரும்போது மீண்டும் எங்கள் கோவில்களை, தெய்வங்களை பிரதிஷ்டை செய்வோம் முழு பலத்துடன் முன்னை விட அழியா பேராற்றலுடன் … மற்ற மதங்கள் இந்து மதத்திடம் தோற்பது இங்கேதான்! இந்த மென் சக்திதான், மெல்லிய ஆனால் உறுதியான ஆன்மபலம்தான் இந்து மதத்தின் பலமும் பலவீனமும்!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: தர்மத்தை எவர் காப்பாற்றுகிறாரோ அவரை தர்மம் காக்கும்.

கர்நாடகாவிலுள்ள வியாஸராஜர் ஸ்வாமி ப்ருந்தாவனத்தை கயவர்கள் புதன் இரவு இடித்து தகர்த்துள்ளனர். விஷயத்தை கேட்டதும் உடனே நூற்றுக்கணக்கான சிஷயர்கள்‌ அங்கே சென்று அவர்கள் திருக்கைகளாலேயே பிருந்தாவனத்தை சரி செய்துள்ளனர். மத்வ சந்யாசிகள் ஈடுபட்டுள்ள இந்தத் திருப்பணி, மனதிற்கு பிரம்மாண்ட அளவில் நம்பிக்கை கொடுக்கிறது.

என்று இப்படிப்பட்ட உணர்வு நம் தமிழக கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு வருகிறதோ… அன்றிலிருந்து கோவிலில் திருடும் கயவர்கள் பயப்பட ஆரம்பிப் பார்கள்..!

யதோ த₄ர்ம: தத: க்ருஷ்ண:யத: க்ருஷ்ண: ததோ ஜய: |
த₄ர்மஏவ ஹதோ ஹந்தி த₄ர்மோ ரக்ஷதி ரக்ஷித: ||

தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கு க்ருஷ்ணன் இருக்கிறான்.
க்ருஷ்ணன் எங்கே இருக்கிறானோ அங்கு ஜெயம் இருக்கிறது.
தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது.
தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe