“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு
மட்டும் எப்படித் தெரிந்தது.?”
பரமபிதாவே அறிவார்.
(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)
ஒரு சிறு பதிவு.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்
தரிசனத்துக்கு வந்தாள்.
“என் மவனுக்குப் பேர் வைக்கணும்”
என்று பெரியவாளிடம் பணிவாக தெரிவித்தாள்.
அழகான தமிழில்,சுந்தரமான சிவனுடைய
பெயர்களில் ஒன்றைக் கூறுவார்கள்,பெரியவா
என்பது அருகிலிருந்த அடியார்களின் எதிர்பார்ப்பு.
“சதானந்தம்-னு பேர் வை”-பெரியவாள்.
இது பொதுப் பெயராக இருக்கிறதே?
எந்த ஒரு தெய்வத்தையும் சுட்டிக்காட்டுவதாக
இல்லையே? என்று அடியார்களுக்கு மன நெருடல்.
பின்னர் தெரியவந்தது.- அந்தப் பெண்மணி
கிறிஸ்துவ மதத்தை தழுவியர் என்று.
அதனால்தான்,அந்தத் தாயாரின் மனத்தில் நெருடல்
ஏற்படாத வகையில்,ஒரு பொதுப் பெயரைக்
கூறினார்கள் போலும்!
அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு
மட்டும் எப்படித் தெரிந்தது.?
பரமபிதாவே அறிவார்.




