லீடர் குரங்கு சொல்கிறபடி குரங்குகள் நடக்கின்றன!

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு
சொல்கிறபடி நடக்கின்றன”

(“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!”)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின்,
இருபது – முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர்குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!

பெரியவாள் சொன்னார்கள்:

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு
சொல்கிறபடி நடக்கின்றன.

“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.

“ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

“ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு
துக்கமாய் கதறும்.

“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!”

கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, “பெரியவா என்ன உத்தரவு
போட்டாலும் செய்கிறோம்” என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக
ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.

“காலையில், இரண்டு நிமிஷம் “ராம, ராம” என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் “சிவ, சிவ” ன்னு சொலுங்கோ…”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா” என்றார்கள்.

அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர்!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை – நமக்கு நல்ல வழிகாட்டிகள்;
“ஆச்சார்யர்கள்”.

அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories