
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்படும். சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படும். இது வழக்கமாக நடைபெறுவது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பல்வேறு இடர்பாடுகளை கடந்து தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
வரும் 8-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.