“பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும்;……. எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்!”.
(இந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும்)
(பரத்துக்கும்-இகத்துக்கும் வழிகாட்டிய பெரியவா)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பரமசாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவா முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். பேச முயன்றார். தொண்டை அடைத்துக் கொண்டது, சமாளித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி சொல்லத் தொடங்கினார்.
”நான் ஒண்ணுமே செய்யலே… இகத்துக்கும் வழி செய்யலே. சம்பாத்தியம் கிடையாது. பரத்துக்கும் ஒண்ணும் பண்ணலே .கோயில் குளத்துக்கும் போனதேயில்லை. சந்தியாவந்தனம் கூடப் பண்ணினதில்லை இப்போ நினைச்சாலே பயமாயிருக்கும்…”
பெரியவாசொன்னார்கள்:
“ஆறு பக்கத்திலுள்ள ஒருகிராமத்தில போய்த்தங்கு. எத்தனையோவீடு, சும்மா பூட்டிவெச்சிருக்கா. ஒருவீட்டை புடிச்சு, நன்னா பராமரிக்கிறேன்னு சொல்லு.
“தினமும் ஆற்றில் ஸ்நானம்செய்து ஸஹஸ்ரகாயத்ரி ஜபம் பண்ணு. இது பரத்துக்கு.
“அந்த கிராமத்திலுள்ள போஸ்டாபீஸிலே போய் உட்கார்ந்த்துக்கோ. லெட்டர் எழுதத்தெரியாதவா, மணியார்டர் பாரம் எழுதத்தெரியாதவா, ரெஜிஸ்டர்-சேவிங்க்ஸ் செய்யத் தெரியாதவா நிறையப்பேர் வருவா. நீ எழுதிக்கொடு. அவா எதாவது கொடுப்பா. அதுபோறும், இகத்துக்கு…
“கூடியவரை தப்புப் பண்ணாமலும், பொய் பேசாமலும் முடிந்தஅளவு மெளன விரதம் இருந்துண்டுவா…”
வந்த அடியார்க்கு ரொம்பவும் திருப்தி. தன்னால் செய்ய முடியாத பரிகாரங்களை செய்யச்சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் மறைந்தது.
பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும். எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்
இந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும்



