
மகாளய அமாவாசை : முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை…!
திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘மகாளய அமாவாசை” என்று சிறப்பித்து கூறுவார்கள்.
இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 05ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 07.05 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் புதன்கிழமை மாலை 03.56 மணிக்கு முடிகிறது.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி சிறப்பாக திகழ்கிறது.
மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையிலும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.
மூதாதையரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென்கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
பிதுர் தேவதைகள்
நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.
- நம் பித்ருக்கள் (மண்)
- புரூரவர் (நீர்)
- விசுவதேவர் (நெருப்பு)
- அஸீருத்வர் (காற்று)
- ஆதித்யர் (ஆகாயம்)
என பஞ்சபூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்றது.
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு நமக்கு உதவிய அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடைய செய்கிறது. எனவே, அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
இவர்கள் ‘காருண்ய பித்ருக்கள்” என்று அழைக்கப் படுகின்றார்கள். எனவே மறைந்த நண்பர்கள், தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை நாளில் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவலாம்.
மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது. புண்ணிய மாதமான இந்த புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக!

ப்லவ புரட்டாசி 20ம் தேதி 06.10.2021 புதன் கிழமை மாஹாளய அமாவாசை பக்ஷ மஹாளய பதினிறாம் நாள் அமாவாசை ,
ஆசமனம் செய்து 3 பில் பவித்திரத்தை மோதர விரலில் போட்டு கொண்டு காலுக்கு அடியில் 3 கட்டைபில்லை போட்டுக்கொள்ளவும் , 3 கட்டை பில்லை பவித்திரத்துடன் இடுக்கி கொள்ளவும்
மந்திரம்
ஆசமனம்
ப்ராணாயாமம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் …………………. ஓம் பூ: ——- பூர்புவஸ்வரோம்,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ( ஸ்ரீ பகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) அபவித்ர பவித்த்ரோவா ஸர்வாவஸ்தா கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்தர சுசிஹி மானஸம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஸய: (sbvc)ஸ்ரீ ராம ராம ராம திதிர்விஷ்ணு : ததாவார: நக்ஷத்ரம் விஷ்னுரேவச யோகஸ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகது ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பாகவத:மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்ஹண: த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே(சப்த சமுத்திரதிரே) சகாப்பதே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ப்லவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்யதிதெள வாஸர செளம்ய வாஸரயுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் ப்ராம்மி நாம யோக நாகவ காரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்யதிதெள (ப்ரசினவிதி -பூணல் இடம் ) …………..கோத்ரானம் …………சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு,பிதமஹா,பிரபிதாமஹானாம் ,மாத்ரு ,பிதமஹி ,பிரபிதாமஹிணாம் ,……………கோத்ரஸ்ய …………..சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னிக மாதமஹா ,மாதுஹு பிதமஹா ,மாதுஹு பிரபிதாமஹானாம் , தத் தத் கோத்ராணாம் தத்தத் சர்மனாம் வசு வசு ஸ்வருபானாம் பித்ருவ்ய மாதுலாதி வரகத்வய அவ்ஸருஷ்டாநாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி அஷாடாதி பஞ்சம அபர பக்ஷே ஸக்ருன் மஹாளய பக்ஷே ஸ்ராத்தம் அத்ய தின ப்ரயுக்தம் தில தர்பண ரூபேன அத்யகரிஷ்யே என்று சொல்லி கையில் உள்ள கட்டை தர்பத்தை தெற்கே போடவும் .
3 கட்டை தர்ப்பை பில் இரண்டு பக்கமாக தர்ப்பண தட்டில் வைத்து கொள்ளவும்.
அதன்மேல் 5 அல்லது 7 தர்பையுள்ள கூர்ச்சத்தை தாம்பாளத்தில் கூர்ச்சம் தெற்கு நுனியாக இருக்கும் படி வைக்கவும்.
( சிலர் ஒரு கூர்ச்சம் வைப்பார்கள் சிலர் 3 கூர்ச்சம் வைப்பார்கள் ஆத்து வழக்கப்படி வைத்து கொள்ளவும்)
(பூணலை இடமாக தான் தர்பணம் முடியும்வரை இருக்கணும்)
எள்ளை எடுத்து கொள்ளவும்.
கூர்ச்சத்தில் ஆவாஹனம்:
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச
அஸ்மின் கூர்ச்சே ஸகாருண்யவர்க த்வய பித்ரூன் ஆவாஹயாமி.
என்று எள்ளை கூர்ச்சத்தில் கட்டை விரல் வழியாக மறித்து போடவும்.
பிறகு மூன்று கட்டை பில் கையில் எடுத்து கொள்ளவும்:
ஸக்ருதாஸ்ச்சின்னம் பர்ஹி: ஊர்ணாம்ருது ஸ்யோனம் பிதுர்ப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச்ச அனுகை: ஸஹ ஸகாருண்ய வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.
என்று சொல்லி கூர்ச்சத்தின் மேல் மறிச்சு கட்டை பில் வைக்கவும்.
எள்ளை எடுத்து கொண்டு:
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்.
என்று சொல்லி எள்ளை கூர்சத்தில் போடவும்.
கட்டை விரலை ஜலத்தில் முக்கி கட்டை விரலில் எள் தோய்த்து கட்டை விரலால் தர்பயாமி என்று சொல்லும் போது நிறைய எள்ளு ஜலம் ஒவ்வொரு முறையும் கூர்சத்தில் விடவும்.
தர்பணம் ஆரம்பம்
உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் யயீயு: அவ்ரகா: ருத்க்ஞா: தேனோவந்து பிதரோ ஹவேஷு
…………கோத்ரான், (அப்பா பேர்)
…………..சர்மண:
வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
( எள்ளு ஜலம் விடவும்)
அங்கிரஸோன: பிதர: நவக்வா: அதர்வாண: ப்ருஹவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம
………….கோத்ரான்(அப்பா பேர்)
………….சர்மண: வஸு ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்).
ஆயந்துன: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்தீ அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்
………….கோத்ரான்(அப்பா பேர்)
………….சர்மண:
வஸுரூபான் ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்
…………..கோத்ரான்(தாத்தா பேர்)
…………..சர்மண:
ருத்ர ரூபான்
அஸ்மத் பிதாமஹான்
ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
அக்ஷன் பிதர:
…………கோத்ரான்(தாத்தா பேர்)
…………….சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
யேசேஹ: பிதர: யேசனேஹ யாஹிஸ்ச்ச வித்மயான் உசன ப்ரவித்வான் அக்னே தானு வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தம் ஸ்வதயா மதந்தீ
………….கோத்ரான்(தாத்தா பேர்)
……………சர்மண:
ருத்ர ரூபான்: அஸ்மத் பிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
மதுவாதா: ருதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்நக: ஸந்த்வோஷதீ:
……… கோத்ரான்(கொள்ளு தாத்தா)
…………..சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
மதுநக்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துன: பிதா
………கோத்ரான்(கொள்ளு தாத்தா)
………….சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)
மதுமான்ன: வனஸ்பதி: மதுமானு அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துன:
……கோத்ரான் (கொள்ளு தாத்தா)
……………சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி
(எள்ளு ஜலம் விடவும்)
………….கோத்ரா: (அம்மா பேர்)
……………நாம்னீ: வஸு ரூபா: அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நம: தர்பயாமி
(3தடவை ஜலம் விடவும்)
——கோத்ரா: ( பாட்டி)
………….நாம்னீ:
ருத்ர ரூபா: அஸ்மத் பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி.
(3தடவை ஜலம் விடவும்)
—–கோத்ரா: (கொள்ளு பாட்டி)
………….நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை ஜலம் விடவும்)
(அம்மாவாத்து கோத்ரம் மாமாவாத்து கோத்ரம்)
……கோத்ரான் (அம்மாவின் அப்பா)
……………….சர்மண:
வஸு ரூபான்
அஸ்மத் மாதாமஹான்
ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
….கோத்ரான் (அம்மாவின் தாத்தா)
………………சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
………..கோத்ரான் (அம்மாவின் கொள்ளு தாத்தா)
……………சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
………கோத்ரா:(அம்மாவின் அம்மா)
……………நாம்னீ:
வஸுரூபா: அஸ்மத் மாதாமஹீ:
ஸ்வதா நம்: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
……..கோத்ரா:(அம்மாவின் பாட்டி)
……………நாமனீ:
ருத்ர ரூபா:
அஸ்மத் மாது: பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
……………கோத்ரா: (அம்மாவின் கொள்ளு பாட்டி)
……………நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)
காருண்ய பித் ருகளுக்கு தர்பணம்
நீங்கள் செய்ய விரும்பும்., பந்துகளுக்கு அவரவர் **கோத்திரம் , *””சர்மா வஸு ஸ்வருப ***( உறவு முறை) ஸ்வதா நம தர்பயாமி என்று சொல்லி தர்பணம் செய்யவும் முடிவில்
*தத் தத் கோத்ராணாம் தத்தத் சர்மனாம் வசு வசு ஸ்வருபானாம் பித்ருவ்ய மாதுலாதி வரகத்வய அவ்ஸருஷ்டாநாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ஸ்வதா நமஸ் தர்பயாமி
(3தடவை எள்ளு ஜலம் விடவும்)
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே ஸகாருணிக்க வர்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
(எல்லா ஜலத்தையும் விடவும்)
பூணல் வலம் போட்டு கொள்ளவும்)
எழுந்திருந்து வலமாக
3 முறை கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரக்ஷிணம், பின் நமஸ்காரம்) .
தேவதாப்ய: ஸகாருனிக்க பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: யேவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
யாநி காநிச பாபானி ஜன்மாந்தர க்ருதாநிச, தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:
(அபிவாதயே சொல்லி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்)
பூணல் இடமாக போட்டு கொள்ளவும்.
எள் எடுத்து
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச
அஸ்மாத் கூர்ச்சாத் ஸகாருணிக்க வர்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி.
என்று எள்ளை கூர்சத்தில் போடவும்.
கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து கொண்டு தாம்பாளத்தில் உள்ள எல்லா கட்டை பில் தர்பங்கள் எடுத்து
இடது கையில் பஞ்சபாத்ரம் நிறைய ஜலம் எடுத்து
யேஷாம் ந மாதா, ந பிதா,. ந பந்து:, நச பாந்த்வா:, நான்ய கோத்ரிண:, தே ஸர்வே, த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்ட்டை: , குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
என்று சொல்லிக்கொண்டு கையில் இருக்கும் எல்லா கட்டை பில் தர்பத்துடன் ஒரு பஞ்சபாத்ர நிறைய ஜலம் விட்டு தாம்பாளத்தில் ஜலத்தை விட்டு தர்பங்களையும் போட்டுவிடவும்.
எள் இல்லாமல் கையை ஒதரவும்.
பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்த ஜலத்தில் ஆசமனம்.
செய்யவும்.
ஶுபம்