
ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்
ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்
- அயோத்தியில் உதித்தாய் போற்றி
- ஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.
- இல் ஒன்றானவனே போற்றி.
- ஈகையின் பிறப்பிடமே போற்றி.
- உதாரண புருஷனே போற்றி.
- ஊழி முதல்வனே போற்றி.
- எளிமையின் நாயகனே போற்றி.
- ஏழ்பிறப்பு அறுப்பவனே போற்றி .
- ஐம்புலன் காப்பவனே போற்றி.
- ஒப்பில்லா வீரனே போற்றி.
- ஓம் கார மானவனே போற்றி.
- ஔதர்யம் மிக்கவனே போற்றி.
- கருணாகர மூர்த்தியே போற்றி.
- காண்டீபக் கையோனே போற்றி.
- கிரகங்களின் தலைவா போற்றி.
- கீர்த்திகள் மிக்கவனே போற்றி.
- குகனின் தோழனே போற்றி.
- கூர்மதி கொண்டோனே போற்றி.
- கெடுமதியோரை அழித்தவனே போற்றி.
- கேன்மையின் இலக்கணமே போற்றி. .
- கைகேயி பிரியனே போற்றி.
- கொடையின் கோவலனே போற்றி .
- கோள்களின் தலைவனே போற்றி.
- கௌசல்யா குமாரனே போற்றி.
- சக்கரக் கையோனே போற்றி.
- சாந்தி தருபவனே போற்றி. சாரங்கபாணியே போற்றி.
- சிவ தனுஷை முறித்தோனே போற்றி.
- சீதையின் மனாளனே போற்றி.
- சுயம்புவாய் ஆனவனே போற்றி.
- சொர்க்கம் தருவோனே போற்றி.
- சூரியகுலத் தோன்றலே போற்றி.
- செங்கோல் காத்தவனே போற்றி.
- சேதுபந்தனம் படைத்தவனே போற்றி.
- சைவப் பிரியனே போற்றி.
- சொல்லின் செல்வனே போற்றி.
- சோதனைகள் தீர்ப்பவனே போற்றி.
- சௌந்தர்யம் மிக்கவனே போற்றி.
- ஞானிகள் அடிபணிவோனே போற்றி.
- தசரத குமாரனே போற்றி.
- தாமரைக் கண்ணனை போற்றி .
- திருமால் அவதாரமே போற்றி.
- தீமைகள் அழிப்பாய் போற்றி.
- திருவடி தந்தவனே போற்றி.
- தீயவரை அழிப்பவனே போற்றி.
- துறவிகளின் அடைக்கலமே போற்றி .
- தூய்மையின் பிறப்பிடமே போற்றி.
- தெவிட்டாத அழகனே போற்றி
- தேவர்கள் தலைவனே போற்றி.
- தைரியத்தின் உருவமே போற்றி
- தொடக்கமும் முடிவுமற்றவனே போற்றி.
- தோள் வலியோனே போற்றி.
- நவமியில் உதித்தோனே போற்றி.
- நாராயணன் அவதாரமே போற்றி .
- நித்தியமானவனே போற்றி.
- நீதியில் நிலைப்பவனே போற்றி.
- நுணங்கியோன் தலைவனே போற்றி .
- நூலோர் புகழ்போனே போற்றி .
- நெடுநீர் கடந்தோனே போற்றி.
- நேர்மையின் வடிவே போற்றி
- பகைவனுக்கும் அருள்பவனே போற்றி .
- பாத தூளியால் உயிர்ப்பித்தவனே போற்றி .
- பிரணவப் பொருளே போற்றி.
- புனர்பூசத்தில் பிறந்தவனே போற்றி .
- பூரண அவதாரமே போற்றி .
- பெரிய திருவடி வாகனனே போற்றி.
- பேரின்பம் தருபவனை போற்றி.
- பொதிகை முனி போற்றியவனே போற்றி.
- போது போன்றவனே போற்றி.
- பௌருஷம் மிக்கவனே போற்றி.
- மனதிற்கு இனியா போற்றி.
- மாயை அழிப்பவரே போற்றி.
- மிதிலையின் நாயகனே போற்றி .
- மீன் கண்ணனே போற்றி .
- முதலில் பேசுபவரே போற்றி.
- மூவரில் முதல்வனே போற்றி.
- மெய்ஞானம் உரைப்பவனே போற்றி .
- மேக வண்ணனே போற்றி .
- மை வண்ணனே போற்றி.
- மோட்சம் தருபவனே போற்றி .
- மௌலி துறந்தவனே போற்றி .
- யக்ஞப் பிரியனே போற்றி .
- யாகம் காத்தவனே போற்றி .
- யுக புருஷனே போற்றி .
- யோகம் தருபவனே போற்றி.
- யௌவன நாயகனே போற்றி .
- ரம்மிக்கச் செய்பவனே போற்றி.
- ராவணனை வென்றவரே போற்றி.
- ரிஷிகளின் நாயகனே போற்றி.
- ரௌத்திரம் அற்றவனே போற்றி.
- லட்சுமணப் பிரியனே போற்றி .
- லாவண்யம் மிக்கவனே போற்றி.
- லீலைகள் புரிபவனே போற்றி.
- வசிஷ்டரின் சீடனே போற்றி.
- வாலியை வதைத்தவரே போற்றி.
- விஷ்ணுவின் வடிவே போற்றி.
- வீடனனை ஏற்றவனே போற்றி.
- வேத நாயகனே போற்றி.
- வைணவர் காவலனே போற்றி .
- வௌவியைத் (மான்) தேடியவனே போற்றி.
- க்ஷீர சாகரனே போற்றி
- ஜடாயுவிற்கு அருளியவனே போற்றி.
- ஜாம்பவானுக்கு அருளியவனே போற்றி.
- ஜீவகாருண்யம் மிக்கவனே போற்றி
- ஜேஷ்ட குமாரனே போற்றி .
- ஸ்ரீமன் நாராயணனே போற்றி.
- ஸ்ரீயின் நாயகனே போற்றி.
- ஸௌபாக்கியம் தருபவனை போற்றி.
- ஹனுமனின் நாயகனே போற்றி.
ராமரின் பாதம் பணியும்
குச்சனூர் கோவிந்தராஜ்.