
》 ஸ்ரீராம நவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக, உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும்.
》 இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
》 மிகவும் மகிழ்ச்சியளிக்கும், காரிய ஸித்தியளிக்கும் அழகான சுருக்கமான ஸ்லோகமாகக் கொடுத்துள்ளது,
》 இன்று எதற்குமே நேரம் ஒதுக்க முடியாதவர்கள், இதையாவது தங்கள் கண்களில் அடிக்கடி படும் இடத்தில் எழுதி ஒட்டி வைத்துக்கொண்டு, தினமும் ஒரு முறையாவது சொல்லலாம்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.



