
யாருடன் இருக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தக் கோரும் விதமாக கமலுக்கு தமிழிசை ட்விட்டரில் பதில் கேள்வி கேட்டுள்ளார்…
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.*
– என்று கமல்ஹாசன் Twitter பதிவு செய்திருந்தார்.
அதற்கு தமிழிசை சௌந்தரராஜன், *தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன்-கமல் ட்விட்* உங்களை உருவாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் திரைத்துறையின் படைப்பாளிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து நிற்பது உங்களுக்கு தெரியுமா.? அவர்களுடன் இருக்கிறீர்களா? – என்று பதில் ட்விட்டியிருக்கிறார்



