ஸ்ரீ ஸ்யாமளா தேவி ….. சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.
ஸ்யாமளா தண்டகம் : —
மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||
சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண-
ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||
மாதா மரகதஸ்யாமா மாதங்கி மதஸாலினீ|
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ ||
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே |
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸுகப்ரியே ||
ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம் சர்வ வல்லமை படைத்தது. அருள் அலைகளை ஈர்த்துப்பிடித்து இருக்கும் இடமெங்கும் பரப்ப கூடியது. நம்முள்ளே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. வாழ்வில் உயர இந்த அருள் அலைகள் மிக மிக தேவை. வாழ்வு நல்ல வளம் பெற இந்த அருள் அலைகள் தேவை.
வாழ்வில் கல்வி, செல்வம், இவைகள் அமைய இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி தாயின் அலைகள் மிகவும் இன்றியமையாதது. இவள் இருக்கும் இடமெங்கும் அமைதி கரைபுரண்டோடும். இவள் கருணையோ கடல் போன்றது.
துஷ்ட தேவதைகளை விரட்டி அடிக்கும் சக்தியுடையது.





