தமிழ்புத்தாண்டு சிறப்பு கட்டுரை..சுபகிருது தமிழ் புத்தாண்டில் நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது? ..

சுபகிருது தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கிறது.தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பொங்கல் பண்டியை தமிழகம் மட்டுமல்லாது தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும். அதே அளவுக்கு தமிழகர்களால் சிறப்பிக்கப்படும் முக்கிய பண்டிகையாக தமிழ் புத்தாண்டு உள்ளது.

தமிழகர்களின் முக்கிய பண்டிகையான இந்த தமிழ்புத்தாண்டு தினத்தை பொங்கல் பண்டிகை போல் விமர்சையாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். புத்தாடை அணிவது, கோவில்களில் விசேஷ பூஜை பஞ்சாங்கம் வாசிக்க கேட்டல் அறுசுவை விருந்து என சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த சுபகிருது தமிழ் புதுவருடம் நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது என்று ஒரு விளக்கம் ஜோதிட பண்டிதர்களால் கூறப்பட்டுள்ளது.

ராஜா – சனி
சுபகிருது சித்திரைக்கு முன்னர் வரும் பிலவ வருட பங்குனி மாதம் சுக்கில பட்ச பிரதமை வந்த வாராதிபதி ராஜா வாக கருதப்படுவார். பிலவ வருடத்தின் பங்குனி சுக்கில பிரதமை 2022.4.02 ம் திகதி சனிக்கிழமை வந்துள்ளது. இதனால் சனி பகவானே சுபகிருது வருடத்தின் ராஜாவாக கருதப்படுகிறார். சனி ஆட்சியாகி நிற்பதால் இவ்வாண்டு நீதி துறை, சட்டம் சிறக்கும். மக்களாட்சி உண்டாகும். அநீதிக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும்.

மந்திரி – குரு
மேஷத்தில் சூரியன் புகும் போது அதாவது சித்திரை மாதம் உதயமாகும் நாளின் அதிபதி மந்திரி ஆவார். 2022.04.14ம் திகதி வியாழக்கிழமை காலை 8:48 மணியளவில் மேஷத்தில் சூரியன் புகுக உள்ளார்.

சேனாதிபதி – புதன்
சூரியன் என்று சிம்மத்திற்கு அதாவது ஆவணி மாதம் எந்த வாரத்தில் வருகிறதோ அதன் அதிபதி சேனாதிபதியாகும். ஆவணி மாதம் 17.8.2022 அன்று புதன்கிழமை சிம்மத்திற்கு பிரயாணிக்கிறார்.

அர்க்காதிபதி – புதன்
சூரியன் மிதுனத்தில் புகும் நாள் அதாவது ஆனி மாதம் பிறக்கும் வாரத்தின் அதிபதி அர்க்காதிபதி ஆகும். விலைவாசிகளை அறிய உதவும். 15.06.2022 புதன்கிழமை மிதுனத்தில் நுழைகிறார்.

ஸஸ்யாதிபதி – சனி
கடகத்திற்கு சூரியன் பிரவேசிக்கும் நாளின் அதிபதி அதாவது ஆடி மாதத்தின் ஆரம்ப நாளின் அதிபதி ஸஸ்யாதிபதி ஆவார். பயிர் விளைச்சலை சொல்லுவார். 16.07.2022 சனிக்கிழமை நள்ளிரவு 11:10க்கு சூரியன் கடகத்தை அடைகிறார்.

இராஸாதிபதி – சந்திரன்
சூரியன் துலாமை அடையும் நாள் அதாவது. ஐப்பசி மாதம் பிறக்கும் வாராதிபதி இராஸாதிபதி ஆவார். அறுவகை சுவை கொண்ட பொருட்களின் விளைச்சல் மற்றும் விலைவாசி பற்றி சொல்லும். 17.10.2022 திங்கட்கிழமை அன்று இரவு 7.30 க்கு மேல் சூரியன் துலாமை அடைகிறார்.

தான்யாதிபதி – சுக்கிரன்
சூரியன் தனுசில் பிரவேசிக்கும் மார்கழி பிறக்கும் நாளின் அதிபதி தான்யாதிபதி ஆகும். 16.12.2022 வெள்ளிக்கிழமை தனுசிற்கு பிரவேசிக்கிறார்.

மேகாதிபதி – புதன்
சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரயாணிக்கும் நாளின் அதிபதி மேகாதிபதியாகும். திருவாதிரை மிதுன ராசியில் உள்ள நட்சத்திரம். அதாவது ஆனி மாதம் தான் சூரியன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு வருவார். 22.06.2022 புதன்கிழமை அதிகாலை 11:50க்கு மேல்  திருவாதிரை நட்சத்திரத்தை அடைகிறார்.

நீரஸாதிபதி – சனி
சூரியன் மகரத்தில் நுழையும் நாளின் அதிபதி. தை மாதம் பிறக்கும் நாளின் அதிபதி நீரஸாதிபதி ஆகும். நவரத்தின பயன்பாட்டை சொல்லும். 14.01.2023 சனிக்கிழமை அன்று இரவு 8:50 மணிக்கு மேல் சூரியன் மகரத்தில் நுழைகிறார்.

பசுநாயக்கர் – கோபாலன்
இவ்வாண்டின் ராஜாவான சனி ஸாஸ்யதிபதி, நீராஸாதிபதி என மூன்று பதவிகளை வகின்றார்.

மந்திரியாக குருவும்,சேனாதிபதி புதனே அர்க்காதிபதி மேகாதிபதியாகவும் உள்ளார்.
இராஸாதிபதியாக சந்திரனும்,
தான்யாதிபதியாக சுக்கிரனும் உள்ளார்.

images 57 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories