masala pakoda - 2026

குஜாலா சாப்பிடுங்க.. மசாலா பக்கோடா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
masala pakoda - 2026

மசாலா பக்கோடா

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 150 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
பூண்டு (தோலுடன்) – 6 பல் (தட்டவும்) பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு சமையல் சோடா – 2 சிட்டிகை
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
வனஸ்பதி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு தவிர மற்ற பொருள்களை ஒன்றுசேர்த்து கைகளால் கலக்கவும். பின்னர் இரண்டு மாவுகளையும் சேர்த்து, குறைவாகத் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக இருக்கும்படி பிசிறவும். எண்ணெயைக் காயவைத்து, மாவை பக்கோடா வடிவில் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.