vadakuruma - 2026

இது‌ போல் வருமா..? வடைக் குருமா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
vadakuruma - 2026

வடைக் குருமா

தேவையான பொருட்கள்:
வடை – 4 (கடலை தயிர் வடைக்குத் தயாரித்தது போல் வடை தயாரிக்கவும் – தேங்காய்த் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 4
பொட்டுக்கடலை, கசகசா – தலா ஒரு டீஸ்பூன்
முந்திரி – 5
இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு – 8 பல்
பட்டை – 2 துண்டு கிராம்பு,
ஏலக்காய் – தலா 2
அன்னாசிப்பூ – சிறிதளவு
பிரியாணி இலை – சிறிதளவு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கவும்) பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் – ஒரு கரண்டி எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய்த் துருவல், 3 பச்சை மிளகாய், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, அரை அங்குல இஞ்சித் துண்டு, 4 பூண்டு பல் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் ஒன்று, தட்டிய அரை அங்குல இஞ்சி, நறுக்கிய 4 பூண்டுப் பல், உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, அரைத்த விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி தண்ணீர்விட்டு கொதிக்க வைக்கவும். குருமா கெட்டியானதும் வடைகளை உடைத்துப் போட்டு ஒரு கொதிவந்ததும் அடுப்பை நிறுத்தி தேங்காய்ப்பால், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி சேர்த்து இறக்கிப் பயன்படுத்தவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.