
பலாச்சுளை போளி
தேவையானவை:
கொட்டை நீக்கிய பலாச்சுளை – 20,
கோதுமை மாவு – 100 கிராம்,
பொடித்த வெல்லம் – 200 கிராம்,
கடலைப் பருப்பு,
தேங்காய்த் துருவல் – தலா ஒரு கப்,
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு,
நெய் – 50 மி.லி,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
கோதுமை மாவைச் சிறிது தண்ணீர், எண்ணெய் சேர்த்து, கெட்டியாகப் பிசையவும். கடலைப் பருப்பை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து, தேங்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பலாச்சுளைகளை வேகவைத்து, தேங்காய்ச் சேர்த்து அரைக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து, லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி, அரைத்த தேங்காய்ப் பருப்புடன் சேர்த்து, கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து, பூரணமாக உருட்டிக்கொள்ளவும். பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
இலையில் சிறிது நெய் தடவி, உருண்டைகளை அப்பள வடிவில் இட்டு, நடுவில் பூரணத்தை வைத்து மூடி, போளியாகத் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, மிதமான தீயில், இருபுறமும் நெய் தடவி, வாட்டிஎடுக்கவும்.
குறிப்பு: இதேபோல், நெல்லிக்காய், அன்னாசி சேர்த்தும் போளி தயாரிக்கலாம்.
பலன்கள்: பலாச்சுளையில் வைட்டமின் சி, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், நல்ல எனர்ஜியைத் தரும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.