April 18, 2025, 12:41 PM
32.2 C
Chennai

அண்டத்தில் உள்ள நோயெல்லாம் வெண்டைக்காய் சாப்பிட்ட ஓடிடும் போல.. அவ்வளவு விஷயம் இருக்கு!

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன.

தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் “வெண்டைக்காய்” சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வெண்டைக்காய் பயன்கள் மூளை மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர்.

குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். – ஞாபகசக்தி வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான்.

மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.

நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய் கொண்டுள்ளது. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

ALSO READ:  தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிறு இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.

கல்லீரல் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது.

தினமும் உணவின் போது வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும். சிறுநீரகம் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது.

ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இந்த சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம்.

கொலஸ்ட்ரால் உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயராது.

ALSO READ:  தாம்பரம்- செங்கோட்டை ரயில், கொல்லம் நீட்டிப்பு சாத்தியமா?

எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம். உடல் எடை உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற அதீத பசி உணர்வு தான். வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும்.

வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும். சர்க்கரை நோய் முதல், அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடு என பலவித நோய்களையும் தீர்க்கக்கூடியது இது.

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலை குறைக்கக்கூடியது. ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காய்த் துண்டுகளை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி நீரை மட்டும் பருகி வந்தால் குடல் இயக்கம் சீராகி, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துகள், பெருங்குடல் பாதையைச் சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

இதில் உள்ள கரையும் நார்ச்சத்து, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதன் மூலம், இதய நோய் அபாயம் குறைகிறது.

வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவதால், அதிலுள்ள போலேட், எலும்புகளை வலுவாக்கி ‘ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்புச் சிதைவு பிரச்சினை வராமல் தடுக்கிறது.

எலும்புகள் வலுப்பெறவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தினமும் வெண்டைக்காய் நீரைக் குடித்து வரலாம்.

சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்து அந்த நீரைப் பருகிவந்தால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் கட்டுப்படும்.

ALSO READ:  IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

வெண்டைக்காயில் ஆன்டிஆக்சிடென்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை இருப்பதால், வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து அதைப் பருகுவதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கம் குறையும்.

கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்ப்பது அவசியமாகும்.

வெண்டைக்காயில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கேட்ராக்ட் மற்றும் குளுக்கோமா பிரச்சினைகளைத் தவிர்க்கிறது, பார்வைத் திறன் நன்கு மேம்பட உதவுகிறது.

பாஸ்பரஸ் மற்றும் புரதச் சத்துக்கள் ஏராளம் உள்ளன. இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

இது மூளைக்கு பலத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கவல்லது. நினைவாற்றல் அதிகமாகும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளியும் இருமலும் மூச்சுத்திண்றலும் இருக்கும். இதற்கு வெண்டைக்காய் நல்ல மருந்து.

இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது. வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப்பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும். ஆகவே வெண்டைக்காயுடன் சிறிது சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவது நலமாகும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories