கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட பாட்டி..

500x300 1838222 5 - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 90 வயது பாட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முதலியார் பட்டி தெருவில் உள்ளது பத்திரகாளியம்மன் கோவில். இங்கு கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .

இதில் மகா சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற சுமார் 90 வயது பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இதற்கு முன்பு, வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.

தொடர்ந்து முத்தம்மாள் பாட்டி கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார். இதில் 40 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்து பின்னர் வெறும் கையில் அப்பம் சுடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். முன்னதாக பாசிப்பயறு, தட்டாம் பயறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை பெண்கள் நேர்த்தி கடனாக தயார் செய்து கொடுக்கின்றனர்.

கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு சிவராத்திரி நாளில் பக்தர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காகவும், மகா சிவராத்திரி வழிபாடு செய்வதற்காகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories