December 5, 2025, 1:08 PM
26.9 C
Chennai

கலெக்சன், கமிஷன், கரெப்ஷன்…அரங்கனிடம் மோதும் அறநிலையத் துறை!

srirangam pagal pathu day 8 - 2025

ஸ்ரீரங்கம் : படியளக்கும் பெருமாளை பட்டினியில் தள்ளும் நிர்வாகம்!


அண்மைக் காலமாக மீண்டும் ‘அத்துமீறல்’ சர்ச்சைகளில் சிக்கிவருகிறது ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம். கோயில் செயல் அலுவலர் மாரிமுத்துவை பணியிட மாற்றம் செய்யக் கோரி தமிழக முதல்வருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலமாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் மனு அனுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதற்குப் பின்னணி, அறநிலையத்துறை செயல் அலுவலரின் அதிகார வரம்பு மீறிய நடவடிக்கைதான் என்கிறார்கள், இந்தப் புகார் மனுவைக் கொடுத்தவர்கள்.

செயல் அலுவலர் மாரிமுத்து கையொப்பத்துடன், ஏப்.20ஆம் தேதியிட்டு வெளியான விளக்கக் கேட்புக் கடிதமே, இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்று தெரிகிறது. இந்தக் கடிதம் சமூகத் தளங்களிலும் பகிரப்பட்டு, விவாதப் பொருள் ஆனது. அதில், ‘திருக்கோயிலில் தினசரி பஞ்சாங்கம் வாசித்தல், திருவிழாக்காலங்களில் வேத விண்ணப்பம் செய்தல் ஆகிய பணிகளைக் கவனித்து வரும் வேதவியாச செந்தாமரைக் கண்ணன் பட்டர், உரிய காலத்திற்குள் இதைச் செய்யாமல் காலதாமதம் செய்வதால், பூஜை நடைமுறைகளும் தரிசன நேரமும் தாமதமாகி பக்தர்கள் காத்திருக்க நேரிடுகிறது; கடந்த பங்குனி பிரமோத்ஸவத்தின் போது ஜீயபுரம் மண்டபத்திலும், அதே திருவிழாவில் சப்தாவரணத்தின் போதும் காலதாமதம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிலைமை குறித்து விளக்கங்களுடன் அறிக்கை அளிக்க வேண்டும்’, என்று உள்துறைக் கண்காணிப்பாளர், நிர்வாகப் பிரிவு எழுத்தருக்கு செயல் அலுவலர் விளக்கக் கேட்புக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப் படுகிறது.

இதை அடுத்து, ஸ்தலத்தார் எனப்படும் ஆசார்யர்களை கோவில் நிர்வாகம் அவமரியாதை செய்துள்ளதாகவும், அவர்களின் பாரம்பரியப் பணிகளைத் தட்டிப் பறிக்க திட்டமிடுவதாகவும் கூறி, திருச்சியைச் சேர்ந்த சேது அரவிந்த் முதலானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது தொடர்பாக ஒரு புகார் மனுவை தமிழக முதல்வருக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக அளித்துள்ளனர். அந்த மனுவின் சாராம்சம் இதுதான்..!

ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் திருவாராதன பூஜைகள், திருவிழாக்கள், ஸ்வாமி புறப்பாடுகள் பகவத் ராமாநுஜரால் நெறிப்படுத்தப்பட்டு, ஆகமப்படியும், வைணவ மரபுகள் படியும் ஆயிரமாண்டுகளாக இன்றளவும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கொத்துமுறைகளை ஏற்படுத்தி ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள், ஸ்தானிகர்கள், அர்ச்சகர்கள், அரையர்கள், சாத்தாத வைணவர்கள் என எண்ணற்ற கைங்கர்யபரர்கள் செயலாற்றி வருகிறார்கள். அதைப் பின்பற்றி 1942ம் வருடம் ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டு திருக்கோவில் நிர்வாகம் உள்துறை, வெளித்துறை என இயங்கிவருகிறது. உள்துறை என்பதில் கோயில் பூஜை நடைமுறைகள் வரும். அதில் அறநிலையத்துறை தலையிட சட்டப்படி இடமில்லை.

ஆனால், உள்துறையில் எவ்வித பண பலன்களும் இன்றி செயலாற்றி வரும் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் எனும் வைணவ மத குருமார்களுக்கு தேவஸ்தான செயல் அலுவலர் மாரிமுத்துவால் கடும் இடையூறுகளும் நெருக்கடியும் கொடுக்கப் படுகிறது.

திருக்கோவில் பரம்பரை சுழல்முறை அறங்காவலரில் ஒருவரும், ஸ்தலத்தாரும், ராமானுஜரின் முதன்மைச் சீடரான ஸ்வாமி ஸ்ரீகூரத்தாழ்வான் திருக்குமாரர் வம்சத்தில் 37 தலைமுறையில் வருகிற வேதவ்யாஸ செந்தாமரைக்கண்ணன் பட்டர் ஸ்வாமிகளை திருக்கோவிலை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளில், செயல் அலுவலர் மாரிமுத்து ஈடுபடுவது, வைணவ அடியார்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, உள்துறையில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், வைணவ மத குருமார்களான ஸ்தலத்தார்கள், உள்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டது. ஆனால் தற்போது தலைமை அர்ச்சகரிடம் மட்டும் எழுதிவாங்கி, அதன்படி செயல் அலுவலர் மாரிமுத்து செயல்படுவதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

திருக்கோவில் கட்டண தரிசன டார்கெட்டுக்காக திருக்கோவில் திருவாராதன பூஜைகள், பஞ்சாங்க படண சேவை, வேத விண்ணப்பம் செய்வது என பல விஷயங்களை ஆகம, வைணவ மரபுகளுக்கு எதிராக குறைத்துக் கொள்ளவோ, நீக்கிவிடவோ திருக்கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து விரும்புவதாகவே தெரிகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் சட்டம் வழங்கியிருக்கிற மத நம்பிக்கைகள் சுதந்திரத்தில் தலையிட்டு, பிரச்னைகளை ஏற்படுத்தும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் செயல் அலுவலர் மாரிமுத்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டு, திருக்கோவில், வைணவ மரபுகளை சீர்குலைக்காத சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒருவரை செயல் அலுவலராக நியமித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்- என்று அந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இந்த மனு குறித்து சேது அரவிந்த் தெரிவித்த போது, 1972 ம் வருட உச்சநீதிமன்ற சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பிற்கு விரோதமாக தேவஸ்தான நிர்வாகம் செயல்படுகிறது. தேவஸ்தானத்தின் வசம் உள்ள இரு அர்ச்சகர்களின் ஊழிய முறை நாட்களை, தங்களுக்குத் தோதான அர்ச்சகர்களுக்குப் பிரித்துக் கொடுத்து, தங்கள் கட்டளைப்படி செயல்பட வைக்கிறது நிர்வாகம். அதிகாரிகள் சொல்கேட்டு அந்த அர்ச்சகர்கள் செயல்படுவதால், திருக்கோவில் மரபுகள் சிதையக் காரணமாகிறது.

பங்குனி ஆதி பிரம்மோத்ஸவத்தில் காவிரியின் தென்கரையிலுள்ள ஜீயபுரம் கிராமத்திற்கு நம்பெருமாள் வழக்கம்போல ஆஸ்தான மண்டபம் எழுந்தருளினார். அங்கேயே பிரசாதங்கள் தயார் செய்ய மடப்பள்ளி ஏற்பாடுகள் இருந்தும், முந்தைய வழக்கத்திற்கு மாறாக ஸ்ரீரங்கத்தில் இருந்து இரண்டு மணி நேரம் தாமதமாக காரில் கொண்டு வந்து இறக்கி நம்பெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை பிரம்மோத்ஸவத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு காலை 7 மணிக்கு என அறிவிக்கப்பட்டும், இதே போல பிரசாதங்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதமாகி பின் புறப்பாடு ஆனது. இப்படி தங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை மறைக்க செயல் அலுவலர் இது போன்று ஸ்தலத்தாரை குற்றம் சுமத்தி நோட்டீஸ் விடுகிறார் என்று குறிப்பிட்டார்.

வெகுகாலமாகவே, ஸ்ரீரங்கத்தில் பெருமாள் தளிகைக்கான பிரசாத தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகளும் அனாசாரங்களும் மிகுந்திருப்பதை நாம் அறிய முடிகிறது. கோயிலில் பெருமாளுக்கான அமுது செய்வித்தலுக்கு என்று ஒரு மடைப்பள்ளியும் வெளியில் விற்கப்படும் பிரசாதங்களுக்கு என ஒரு மடைப்பள்ளியும் செயல்படுகிறது. இதில் இங்கேயே வைத்து தயாரிக்கப்படும் பிரசாதங்கள் தான் பெருமாளுக்கு அமுது செய்விக்கப் படும். ஆனால் கோயில் நிர்வாகம் இப்போது அனைத்தையும் ஒன்றாக்கி, கோடிக்கணக்கில் ஏலம் விட்டு, பெருமாள் ஆராதன தளிகையையும் காண்ட்ராக்டர் வசமே விட்டுள்ளது. உள்ளூர் பிரமுகர்கள் பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து, தங்கள் இஷ்டம் போல் இந்த ஏலதாரர் குளறுபடி செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆசார அனுஷ்டானங்களுடன் பெருமாள் தளிகை தயார் செய்யப் பட்ட காலம் போய், இப்போது எவரெல்லாமோ வெளியிலே தயார் செய்து கொண்டு வந்து மடைப்பள்ளி வழியாக பெருமாளுக்குப் போகிறது என்கிறார்கள். படியளக்கும் பெருமாளான அரங்கன் பெயரில் தரமான அரிசி, நெய், பொருள்கள் தேவஸ்தானத்தால் வழங்கப் பட்ட போதிலும், ஏலதாரர் அவற்றில் முறைகேடு செய்து, பிரச்னை வரும் போது உரியவர்களுக்கு கமிஷன் தொகையைக் கொடுத்து விஷயத்தை அத்தோடு முடித்து விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கோயிலில் உள்ள விஷயம் தெரிந்தவர்கள்.

மடைப்பள்ளிப் பணிக்கு ஏழெட்டு பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஓரிவரை வைத்து அவசர கதியில் நெருக்கடியில் பிரசாதம் தயாரிப்பதால் தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை சமாளிக்க வெளியில் வர்த்தக ரீதியில் தயாரிக்கப் படும் இடத்தில் இருந்து ஆகம விரோதமாக பெருமாள் அமுதுக்கு பிரசாதம் வாகனங்களில் கொண்டு வரப்படுவதும் நடக்கிறது, இது மிகப் பெரும் பாவம். படியளக்கும் பெருமாளை பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று மனம் குமுறுகிறார் அங்குள்ள பெரியவர் ஒருவர்.

பொதுவாக எந்த சந்நிதியானாலும், அந்த தெய்வத்துக்குரிய பிரசாதங்களை அருகிலேயே தூய்மையாக தயாரித்து நிவேதனம் செய்வது தான் ஆகமப்படி சரியானது. வெளியிடங்களில் தயாரித்துக் கொண்டு வரும் போது துர்தேவதைகளில் எச்சில் பட்டுவிடுவதால், மூல தெய்வத்துக்கு அந்த பிரசாதம் நிவேதனம் ஆகாது. அதனால் மூல மூர்த்தியை பட்டினி போடுவதாகும். இந்தக் கொடுஞ்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரங்கன் கோயில் நிர்வாகம் மீண்டும் தகுதியான நபர்களை நியமித்து மடைப்பள்ளியை தனித்து இயங்கச் செய்ய வேண்டும்.

திருப்பதியைப் போல் திருவரங்கத்தில் தரிசன நேரத்துக்காக பூஜை நேரங்களை வசதிக்குத் தக்க மாற்ற முடியாது என்பது இந்தக் கோயில் விதி. அதிகாலை கதிரவன் குண திசை சிகரம் வந்தணைந்தான் என்று சூரிய உதயம் ஆனதை வைத்துத்தான், திருப்பள்ளியெழுச்சி சேவை இங்கே நடக்கும். அதை அதிகாலை 5 மணிக்கு எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது என்று பெரியவர்கள் முன்பே வழிகாட்டியிருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் ஜீயரும் இன்னும் நியமனமாகவில்லை.

இந்த நிலையில் கோயில் அர்ச்சகர்களுக்கும் ஸ்தலத்தாருக்கும் இடையே மனவேற்றுமைகளும் விரிசலும் அதிகரித்துள்ளதால், தகுந்த பெரியோர் தலையிட்டு, இரு தரப்பாரையும் பேச வைத்து, பஞ்சாங்க படனம், வேத விண்ணப்பம், பூஜை நேரங்கள் இவற்றை நேரப்படி வகுத்து, அதை மீறாமல் செய்ய அரங்கன் திருமுற்றத்தே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைணவத்தின் தலைமைப் பீடமான அரங்கன் திருமுன் ராமானுஜர் சீராக்கி வைத்த மரபுகள் நம் காலத்தே கெட்டுப் போக நாம் காரணராயிருக்கக் கூடாது என்ற உணர்வு அனைத்துத் தரப்பாருக்கும் வரவேண்டும். வரும் என நம்புவோம்.

  • செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories