வைகாசி விசாகம் … நம்மாழ்வார் திருஅவதார தினம் ..
பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம்
வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக
லகனத்தில் ” சேனைமுதலியார் ” அம்சத்தில் , திருக்குருகூரில் “காரி” என்பருக்கு
மகனாக பிறந்தார் ..
நமது சனாதன மதம், ஜீவர்கள் பல பிறவிகள் எடுத்து அந்த பரம புருஷனை அடைய கூடிய
பாதையில் சென்று கொண்டே இருக்கும் என்பதாக அறிகிறோம் ..
ஒரு ஜீவன் இந்த பூமியில் பிறவி எடுக்கும் போது தனது முந்தைய பல பிறவி பற்றிய
அறிவை கொண்டே பிறக்கும்.
பிறந்த குழநதையின் உச்சி மண்டையில் கபால எலும்புகள் இணையாமல் ஒரு வித ஓட்டை
போல இருக்கும் … (கையை வைத்தால் தெரியும் ) இந்த மாறி அமைப்பு இருக்கும்
போது குழந்தை பேசாது , Sensory nerves and motor nerves இவைகள் முழுமையாக
இயங்காது … (பேனாவை நீட்டினால் அதனால் அதை பிடிக்க முயற்சி செய்தாலும்
தடுமாறும் )
இந்த நிலையில் அந்த ஜீவன் தனது முந்தைய பிறவியின் முழுமையான உணர்வுடன்
இருப்பான் .. நமது (அந்த குழந்தையை பார்க்க செல்லுகின்ற நபர்களை கூட ) பல
பிறவிகளின் விசயங்களை உணரக்கூடியவனாக இருப்பான் (அதன உயர்வு மற்றும் திறன்
அவனது முந்தைய பிறவியின் ஆத்மா பலனை பொறுத்தது !!)
பிறந்த குழந்தையின் கண்கள் மட்டும் இவைகளை வெளிப்படுத்தும் .. (வந்து
இருப்பவன் நல்லவனா இல்லையா என்று ) நான் நிறைய இந்த ஆராய்சிகளை செய்வேன் !!!
சரி இதற்கும் நம்மாழ்வாருக்கும் என்ன தொடர்பு ???
இந்த முந்தைய பிறவிகளின் எண்ணங்களை மறைப்பதான வேலையை செய்வது ஒரு வித வாயு
என்பதாக நம் பெரியோர்கள் கண்டு வைத்தார்கள் ..
அதன் பெயர் “சட வாயு ” .. இந்த வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தையின் “சட
நாடி ” (இதுதான் நமது பூர்வ ஜன்ம ஞாபங்களை தாங்கி இருக்கும் மூளை பகுதியை
கட்டுப்படுத்தும் ) ஒடுங்கி , தன்னை மறந்து இந்த பிறவியில் தன்னை மனதளவில்
இணைத்து கொள்ளும் .
இங்கே … நம்மாழ்வார் பிறந்த சுமார் 12 நாட்கள் தனது தாயின் பாலை கூட அருந்த
வில்லை, அழவும் இல்லை ..
பின்னர் இவரது பெற்றோர் இவருக்கு “மாறன் ” என பெயரிட்டு திருக்குருகூர்
நம்பி கோவிலுக்கு அழைத்து செல்ல ..
அங்கு இருந்த புளிய மரத்தின் போந்தின் உள்ளே தவழ்ந்து சென்று மௌனமாக அமர்ந்து
கொண்டார் ..
இவர் பிறவியிலே சட வாயுவை சூழாமல் தன்னை காத்துக்கொண்டதால் … இவர் அந்த
வாயுவை கோபம் கொண்டு தடுத்து எதிர் கொண்டதால் இவர் …
“சட கோபர் ” என பெயர் பெற்றார் ..
வைணவ கோவில்களில் பட்டர் ஒரு தொப்பி போன்று பெருமாள் பாதங்கள் கொண்ட “சடாரி “
என்கிற ஒன்றை தலையில் வைப்பார்களே .. அதன் பெயர் “சட கோபம் “தான் .. அதுதான்
மருவி சடாரி என்று ஆகி விட்டது ..
அது நீங்கள் வணங்க போகும் இறை மூர்த்தத்தின் பாதங்களை உங்கள் தலையில்
வைத்துக்கொண்டு ..
“அடேய் நீ இப்போது ஜீவனாக இந்த பெயர் கொண்டு பெருமை கொண்டு இருக்கிறாய் , உனது
உண்மையான சொரூபம் வேறு ” என்று நமது சட நாடியை திறந்து காட்டவே ..
நமது உச்சி மண்டையில் அதை தலை வணங்கி பொருத்தி கொள்கிறோம் …
இந்த பிறவியில் கர்வம் கொண்டு பல விஷயதிகளில் நாட்டம் கொண்டு அலையும் நமது
ஜீவன் தன்னிலை உணர்ந்து உய்விக்க வந்த
சடகோபரை போற்றுவோம் …
– விஜயராகவன் கிருஷ்ணன்




