அச்சன்கோயிலில் தேரோட்டம் கோலாகலம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

achankoil ther function1 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களில் முக்கிய கோவிலாக அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது ‌

கேரள மாநிலம் அச்சன்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில், மண்டல பூஜையையொட்டி மகோத்சவ திருவிழா டிச 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில், மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

1001147259 - 2026

திருவிழாவின் முதல் ஐந்து நாட்களில் பிரதானமாக உற்சவபலி நடைபெற்றது. ஆறாம் மற்றும் ஏழாம் நாள்களில் கருப்பன் துள்ளல் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. எட்டாம் திருநாளில் எட்டாம் பூராம் நிகழ்வும் நடைபெற்றது.

ஒன்பதாம் திருநாளான இன்று டிசம்பர் 25 கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடைபெற்றது. கேரளாவில் இரு கோவில்களில் மட்டுமே தேரோட்டம் நடைபெறும் ஒன்று பாலக்காடு கல்பாத்தி விசுவநாதர் கோயில் இரண்டாவது அச்சன்கோவில் ஆகும்.

இந்த ஆண்டு அச்சன்கோவில் நடந்த தேரோட்டத் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தமிழகம் கேரளாவில் இருந்து பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. பத்தாம் நாள் விழாவில் வெள்ளி கிழமை முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெறும்.

தொடர்ந்து டிசம்பர் 27 அன்று மதியம் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு ஆன்மிக மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களை பரவசப்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories