“பெரியவாளின் சினமும்-வைத்யமும்”
தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது.
எத்தனையோ மருத்துவம் பார்த்தாயிற்று. எந்தப் பலனும் இல்லை.இந்நிலையில்தான்
பெரியவாளை தரிசிக்க வந்தார் அந்த பக்தர்.
பெரியவாளைக் கண்டவுடனே ஒரே கதறல்.
இம்மாதிரி சமயங்களில்,வாத்சல்யத்துடன்
அன்புடனும் பேசுவார்கள் பெரியவா.
ஆனால் இப்போது மிகக் கோபமாக கடிந்து
கொண்டார்கள்.“செய்வதெல்லாம் பாவ காரியம். பாவம் செய்கிறோம்
என்பதை உணர்வதும் இல்லை” என்றார்கள்.
ஏன் பெரியவா இப்படியெல்லாம் பேசுகிறார்கள்
என்று சிஷ்யருக்கு புரியவில்லை.
“இவரின் குடும்பத்தாரால் ட்ரஸ்ட் ஒன்று
ஆரம்பிக்கப்பட்டது.அது தர்ம காரியங்களுக்கானது.
விளை நிலங்களுக்கும் குறைவில்லை. தண்ணீர்
பந்தல் அமைத்து தாராளமாகத் தர்மம் பண்ணலாம்.
ஆனால் இவர் அந்த சொத்தையே விலை பேசி விட்டார்”
என்றார்கள் ஸ்வாமிகள்.
வந்தவருக்கு தன் தவறு புரிந்தது.“இனி இத்தவறு நடக்காது.தண்ணீர் பந்தல்
அமைத்து தர்ம காரியம் செய்வேன்” என்றார் உறுதியாக.
சற்று சினம் தணிந்த பெரியவா,“வசம்பை அரைத்து வயிற்றில் தடவிக்கோ சரியாயிடும்”
சில நாட்கள் சென்றபின், மீண்டும் வந்த அவர்
பெரியவா விசாரிப்பதற்கு முன்பாக, “இப்போ எந்த தொந்தரவும் இல்லை” என்று கூறினார்.
வசம்பைத் தடவச் சொன்னவர் ஸ்வாமிகளாயிற்றே!