சபரிமலையில் ஆடி மாதமான கர்க்கடக மாத நடை திறப்பு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் பெருந்திரளாக சந்நிதியில் காத்திருந்தனர்.
ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை கோயில் பிரதான தந்திரி சந்நிதி நடையை திறந்து வைக்க, அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, ஐயப்பனின் பிரசாதம் வழங்கப் பட்டது. இருமுடி ஏந்தி பக்தர்கள் பெருமளவில் ஐயப்பன் சந்நிதியில் குவிந்துள்ளனர்.




