திருப்பதி கவுன்டர்கள்: கர்நாடக நிறுவனத்திற்கு ஒப்படைப்பு!

Published:

Thirupathi - 2026

திருமலை மற்றும் திருப்பதியில் நிா்வகிக்கப்பட்டு வரும் கவுன்ட்டர்களின் நிா்வாக பொறுப்பை தேவஸ்தானம் கா்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

திருமலையில் லட்டு பிரசாதம் வழங்கும் கவுன்ட்டர்களில் இதனை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி பூஜைகள் செய்து வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். அதன் பிறகு அவர் கூறியது:

ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் வசதிக்காக திருமலை மற்றும் திருப்பதியில் பல வியாழக்கிழமை காலை செயல்பட்டு வருகிறது.

லட்டு பிரசாதம் வழங்குதல், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குதல், முடிகாணிக்கை செலுத்துதல், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள கவுன்ட்டா்கள், ஸ்கேன் செய்யும் கவுன்ட்டர்கள், அலிபிரி சோதனை சாவடியில் உள்ள கவுன்ட்டர்கள், வாடகை அறை வழங்கும் கவுன்ட்டர்கள் பல என உள்ளன.

இவற்றின் நிா்வாக பொறுப்பு கா்நாடக மாநிலம் பெங்களூரை சோந்த கேவிஎம் என்போ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள 164 கவுன்ட்டர்களில் 3 ஷிப்டுகளில் 430 பேர் பணிபுரிய உள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

கவுன்ட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றப்படுவர். இவா்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு நியமித்தபடி இவர்களுக்கு ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்டவை அளிக்கப்படும் என்றார் அவர்.

Related articles

Recent articles

spot_img