கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருக்கல்யாண வைபவம்!

ஆலயங்கள் சற்றுமுன் தமிழகம்
pasupathiswarar - 2026

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவிலின் மண்டபத்தில் அலங்காரவள்ளி, சௌந்தரநாயகி மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் காட்சி அளித்தார்.

மேலும் விநாயகர் பூஜை, மாங்கல்ய பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பசுபதீஸ்வருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதனையடுத்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றதை தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் ஆராதனையும் நடந்தேறியது. இதனை தொடர்ந்து மட்டையடி உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.