December 8, 2025, 11:40 AM
25.3 C
Chennai

வைகாசி விசாகம்: சுவாமிமலை திருப்போரூர் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம்..

வைகாசி விசாகம் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது . ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

வைகாசி விசாகம் விழாவையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். திருத்தணிகோவிலில் வைகாசி விழா வழிபாட்டு க்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவில் நிரம்பி வழிந்தது. அரோகரா கோஷமிட்டபடி அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணிநேரத்துக்கும மேல் ஆனது.

சுவாமி மலையில்-

சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சண்முகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து  சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு யாகம் நடைபெற்றது.108சங்காபிஷேகம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் .

வைகாசி விசாகத்தை யொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலை கடந்த 17-ஆம் நூற்றாண்டு ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் கட்டிய தாக வரலாறு உள்ளது. அவர், திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்ணகப்பட்டு என்ற இடத்தில் மடம் ஒன்றை நிறுவி அங்கிருந்தபடியே மடாதிபதியாக விளங்கி முருகப்பெருமானை நித்திய வழிபாடு செய்து வந்தார். பின்னர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாக நாளில் இறைவனோடு ஜோதிமயமாக இரண்டறக் கலந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாகத்தில் கண்ணகப்பட்டில் உள்ள சிதம்பர சுவாமிகள் மடத்திலும் குருபூஜை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 

அதன்படி மடத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சன்னிதியில் மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீப ஆராதனை கள் நடைபெற்றது. இதே போல் கந்தசாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிதம்பர சுவாமிகள் சந்நிதியிலும் அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் தொடர்ந்து 6 வாரங்கள் வழிபாடு செய்தால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும். மேலும் ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இதேபோல் வல்லக்கோட்டை முருகன் கோவிலிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முருகப்பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரா கிராமகள், வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து திரளானா பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிர மணியசுவாமி கோயில் மற்றும் பெரும்பேடு முத்துக் குமாரசாமி கோவிலில் பிரதோஷம் மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

1711053 chennai - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories